Tue ,Apr 16, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57

டிவிட்டர் டிரெண்ட்ஸ்

ஃபேஸ்புக் நிறுவனத்தின் அதிரடி முடிவால் ஆடிப்போன ஊழியர்கள்... 

Nandhinipriya Ganeshan November 09, 2022

செப்டம்பர் மாதத்தின் பிற்பகுதியில், ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜூக்கர்பெர்க், செலவு குறைப்பு நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும், அதுமட்டுமல்லாமல் பல மறுசீரமைப்பு நடவடிக்கைகளை திட்டமிட்டுள்ளதாக கூறியிருந்தார். அதன்படி, சமுக வலைத்தளப் பிரிவில் முடிசூடா மன்னனாக விளங்கும் பேஸ்புக்-ன் தாய் நிறுவனமான மெட்டா இன்று உலகம் முழுவதும் உள்ள அதன் நிறுவனத்தின் மொத்த எண்ணிக்கையில் இருந்து 11,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. வருவாயில் ஏமாற்றமளிக்கும் வீழ்ச்சியை தொடர்ந்து இந்த பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மார்க் ஜூக்கர்பெர்க் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய பிறகு, அதன் பணியாளர்களில் சுமார் 50% குறைக்கப்பட்ட அதிர்ச்சியே இன்னும் அடங்கவில்லை. அதற்குள் மெட்டா நிறுவனத்தின் பணிநீக்கம் ஊழியர்களுக்கு மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பத்துடன் மதம் மாறிய விஜய் பட நடிகர்..

Nandhinipriya Ganeshan November 09, 2022

கமல்ஹாசன் நடித்த "விருமாண்டி" (2004) திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாய் தீனா. அதன்பிறகு அவர் விஜய் நடித்த ‘தெறி’, ’பிகில்’, ’மாஸ்டர்’ தனுஷ் நடித்த ’வடசென்னை’ லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாநகரம்’ ரஜினிகாந்த் நடித்த ’எந்திரன்’ உள்பட பல்வேறு படங்களில் வில்லனாக நடித்திருப்பார். படத்தில் மட்டும் தான் அவர் வில்லன். ஆனால் நிஜத்தில் அவரது பேச்சு சமூக அக்கறை கொண்டதாக இருக்கும். இதனால் பல திரையுலக பிரபலங்கள் இவரை படத்தில் தான் வில்லன் ஆனால் நிஜத்தில் ஹீரோ என்று பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது நடிகர் சாய் தீனா புத்த பிட்சு ஒருவர் முன்னிலையில் 22 உறுதிமொழிகளை ஏற்று புத்த மதத்திற்கு குடும்பத்துடன் மாறியுள்ளார். புத்த மதத்திற்கு மாறிய பிறகு குடும்பத்துடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்றா தாலிய... தாயார் செய்த அதிரடி செயல்...நமக்கு இப்படி ஒரு அம்மா இருக்க கூடாதா!

Priyanka Hochumin November 01, 2022

தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த தினேஷ் என்பவர் ஒரு ஆட்டோ ஓட்டுநர். அதே பகுதியை சேர்ந்த கார்த்திகா என்பவரை காதலித்து வந்தார் தினேஷ். இருவரும் ஒரு வருடமாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமுதாயம் என்பதால் கார்த்திகாவின் பெற்றோர் இவர்களின் காதலை ஏற்கவில்லை. ஆனால் தினேஷின் பெற்றோர் அவர்களின் காதலை முழுமையாக ஏற்றுக்கொண்டனர். எனவே, பெண்ணின் பெற்றோருக்கு தெரியாமல் தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் இருக்கும் மிகவும் ப்ரஸீத பெற்ற வேப்பம்பட்டி இசக்கியம்மன் கோவிலில் நண்பர்கள் உதவியுடன் ஆரவாரம் இன்றி மஞ்சள் தாலி கயிறு கட்டி திருமணம் நடைபெற்றது.

'சிரிக்கும் சூரியன்' - நாசா வெளியிட்டுள்ள அழகிய புகைப்படம்...

Nandhinipriya Ganeshan October 29, 2022

நாசாவின் சன் டுவிட்டர்  அக்கவுண்டில் சூரியன் சிரிப்பது போன்ற புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் சூரிய மேற்பரப்பில் உள்ள கரோனல் துளைகள் சரியான இடங்களில் தற்செயலாக உருவாகி, நமது சூரியன் சிரிப்பது போல் காட்சி அளிக்கிறது. இரண்டு கரோனல் துளைகள் மகிழ்ச்சியான கண்கள் போல் காட்சி தருகிறது. எப்போதும் சிறிது சிமிட்டுகிறது, மூன்றாவது துளை அதன் கீழே மையத்தில் சிரிப்பது போன்ற குழியை உருவாக்குகிறது. புற ஊதா ஒளியில் பார்த்தால், சூரியனில் உள்ள இந்த இருண்ட திட்டுகள் கரோனல் துளைகள் என்று அழைக்கப்படுகின்றன, மேலும் அவை வேகமான சூரியக் காற்று விண்வெளியில் வெளியேறும் பகுதிகளாகும் என நாசா விளக்கம் அளித்து உள்ளது. இதை அழகாக படம் பிடித்து நாசா வெளியிட்டுள்ளது, தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. 

'எவ்வளவு பாசமாக வளர்த்து இருந்தாலும் மிருகம் மிருகம் தான்'... உரிமையாளரை தாக்கிய மலைப்பாம்பு - வைரல் வீடியோ.. 

Nandhinipriya Ganeshan October 27, 2022

இந்த உலகில் இரண்டு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். சிலர் பாம்பை கண்டாலே பத்தடி தூரம் பயந்து ஓடுவார்கள். ஏன், "பாம்பை கண்டால் படையும் நடுங்கும்" என்ற பழமொழியும் கூட இருக்கிறது. ஆனால், இன்னும் சிலர் பாம்புகளை செல்லப் பிராணிகளாக வளர்த்துவருகிறார்கள். இருப்பினும், உங்களுக்கு பாம்பை கண்டாலே பயம் என்றால் இந்த வீடியோவை கொஞ்சம் எச்சரிக்கையுடன் பாருங்கள். ஏனென்றால், அப்படி ஒரு வீடியோ காட்சியை தான் பார்க்க போகிறோம். 

UPI பேமெண்ட் செயலிக்கு தடை வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

Priyanka Hochumin October 26, 2022

டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனையை செயல்படுத்தும் வகையில் நிறைய செயலிகள் இருக்கிறது. அதில் தங்களுடைய போன் பே லோகோவை காப்பியடித்ததாக "மொபைல் பே" செயலி மீது வழக்கு தொடரப்பட்டது. அதற்கு தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் மொபைல் பே செயலுக்கு தடை விதித்துள்ளது. இந்த செயலியை ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் இருந்து இந்த செயலியை அகற்றுமாறு கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்ற நோட்டீஸ் வழங்கியுள்ளது.

வாட்ஸ்அப் சேவை முடக்கம்.. அதிர்ச்சியில் பயனர்கள்..

Nandhinipriya Ganeshan October 25, 2022

நம்முடைய அன்றாட வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாக வாட்ஸ்அப் உருவெடுத்துள்ளது என்றால் அது மிகையாகாது. ஏனென்றால், பெரும்பாலான அலுவலகச் செயல்பாடுகள் மற்றும் நடைமுறைகள், இப்போதெல்லாம் வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாகத்தான் பகிரப்படுகின்றன. தகவல்தொடர்பின் ராஜாவாக வாட்ஸ்அப் மாற்றியுள்ளது. இந்த நிலையில், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் வாட்ஸ் அப் சேவை முடங்கியுள்ளது. இந்தியாவில் உள்ள வாட்ஸ்அப் பயனர்களால் தற்போது செய்திகளை அனுப்பவோ பெறவோ முடியவில்லை. சுமார் 50 நிமிடங்களுக்கும் மேலாக வாட்ஸ் அப் சேவை முடங்கி உள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாட்ஸ் அப் சேவை முடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் வாட்ஸ்அப் நிறுவனம் சார்ப்பில் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

ரொம்ப அசிங்கமா போய்டிச்சி குமாரு.. கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் மாஸ் ரிப்ளை..!

Nandhinipriya Ganeshan October 25, 2022

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்லும் லட்சத்துடன் களமிறங்கியுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இது உலகம் முழுவதும் உள்ள இந்திய ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக அமைந்தது. இந்த நிலையில், இந்தியாவின் வெற்றியை பாராட்டும் விதமாக கூகுள் சிஇஓ சுந்தர பிச்சை ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் போட்ட டிவிட் தற்போது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Deepavali 2022 Memes Tamil : போனசா... அப்டினா? இணையத்தை கலக்கும் தீபாவளி போனஸ் மீமஸ்.....! 

Manoj Krishnamoorthi October 23, 2022

தீபாவளி பண்டிகை என்றால் கொண்டாட்டம் ஒரு புறம் என்றால் செலவு மறுபுறம் இருக்கும். இந்த செலவை சரிக்கட்ட குடும்ப தலைவர்கள் எதிர்பார்த்து இருப்பது போனஸ் தான். "நாலு காசு பார்க்க ரத்த அடிபடனும்" என்பது போல இந்த தீபாவளி போனஸ் என்றாலே அலுவலகத்தில் போராட்டம் தான் என்பதை நகைச்சுவையும் நையாண்டி கலந்து கீழ்வரும் மீம்ஸ் வெளிப்படுத்தியுள்ளது.  

இதுக்கு தான் ஆள பாத்து எடை போடாதீங்கன்னு சொல்றது...எறும்போட முகத்தை பாருங்க!

Priyanka Hochumin October 22, 2022

2022 Nikon Small World Photomicrography போட்டியானது சமீபத்தில் நடந்தது. இது சாதாரண கண்களால் பார்க்க முடியாத உயிரினங்களை புகைப்படம் எடுக்க தேர்ந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த போட்டியில் கலந்து கொண்ட லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த யூஜெனின்ஜஸ் கவாலியாஸ்கஸ் என்பவர் எறும்பின் முகத்தை மிகவும் பக்கத்தில் இருப்பது போன்ற புகைப்படத்தை எடுத்து அதற்கு பரிசுகளையும் வாங்கியுள்ளார். அதை பார்க்கவே மிகவும் பயங்கரமாக இருக்கிறது. கோர பற்கள், மிகவும் பயங்கரமான தோற்றத்துடன் பார்க்கவே ராட்சஷன் போன்ற தோற்றத்தை கொண்டுள்ளது. இது எறும்பு தானா என்று யாரும் நம்ப மாட்டார்கள் அப்படி இருக்குது.