Nandhinipriya Ganeshan February 27, 2023
ஆரம்பத்தில் பிரபல மியூசிக் சேனலில் தொகுப்பாளராக இருந்து புகழ்பெற்று அதன்பிறகு விஜய் டிவிக்கு வந்தவர் மணிமேகலை. தற்போது தொகுப்பாளராக இல்லாமல், காமெடியனாக மாறிவிட்டார். குக் வித் கோமாளி ரியலிட்டி ஷோவில் தற்போது முன்னணி கோமாளியாக வலம் வருபவர். இவருக்கு ரசிகர்கள் கூட்டமும் எக்கச்சக்கம். இந்த நிலையில், குக் வித் கோமாளி சீசன் 4 லிருந்து வெளியேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார் மணிமேகலை. இதை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து இருக்கிறார். அதாவது. 'கடினமான முடிவு தான். ஆனால் எடுத்தாக வேண்டிய நிலை' என்று கூறி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல், எனக்கு ஆரம்பத்தில் இருந்து ஆதரவாக இருந்த ரசிகர்களுக்கு மிக்க நன்றி எனவும் தெரிவித்துள்ளார். ஆனால், என்ன காரணம் என்று தெளிவாக சொல்லாததால் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றனர்.
UDHAYA KUMAR February 09, 2023
குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி சமீபத்தில்தான் விஜய் தொலைக்காட்சியில் துவங்கி வார இறுதிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சியில் மீண்டும் புகழ் வந்திருப்பதால் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் தற்போது ஸ்ருஷ்டி டாங்கே, காலயன், ஷெரின், விசித்திரா, ராஜ அய்யப்பா, விஷால் உள்ளிட்ட போட்டியாளர்கள் பங்கு பெற்றிருக்கிறார்கள். முதல் வாரம் அறிமுக வாரம், இரண்டாவது வாரம் புதுமுகங்கள் என்பதால் மூன்றாவது வாரமா இந்த வாரம் முதல் எலிமினேசன் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்னமும் பெரிய அளவுக்கு பலரின் முகம் அறிமுகம் ஆகாத நிலையிலும் இப்போதே எலிமினேசன் வேண்டுமா என வருத்தத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் இந்த வாரம் ஷெரின், காலயன், கிஷோர் இவர்களில் ஒருவர்தான் எலிமினேட் ஆக இருக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. கிஷோர் தான் இந்த வாரம் வெளியேறப்போகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. யார் அதிகாரப்பூர்வமாக வெளியேறுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
UDHAYA KUMAR February 08, 2023
குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து தான் நீக்கப்படவில்லை எனவும் தான் குடித்துவிட்டு கலாட்டா செய்யவில்லை எனவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார் ஓட்டேரி சிவா. குக் வித் கோமாளி நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியின் மிகப் பிரபலமான காமெடி குக்கரி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி மூலம் புகழ், பாலா, சிவாங்கி, அஸ்வின் என பலரும் புகழ் பெற்றுள்ளனர். பலருக்கும் இந்த நிகழ்ச்சிதான் அடையாளம். 3 சீசன்களை வெற்றிகரமாக கடந்து 4வது சீசனை எட்டியிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மறுபடியும் புகழ், சிவாங்கி ஆகியோர் வந்துள்ளனர். இதனாலேயே நிகழ்ச்சி மீது மீண்டும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இம்முறை சிவாங்கி குக்காக ஜொலிக்கிறார். காமெடிக்கு பஞ்சமின்றி இருக்கும் இந்த நிகழ்ச்சியில் இணையதளங்களில் பிரபலமானவர்களையும் எடுத்து போட்டு பொங்குவார்கள். அந்த வகையில் சமீப காலங்களாக பிரபலமாகியுள்ள ஓட்டேரி சிவா என்னும் நபரையும் அழைத்து நிகழ்ச்சியில் பங்கு பெற செய்தார்கள். ஆனால் திடீரென்று அவர் இல்லாமல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்கு அவர் குடித்துவிட்டு ரகளை செய்வதாகவும் நிகழ்ச்சியின் மாண்பை கெடுப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. ஆனால் அதில் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியாமல் பலரும் இதையே பேச ஆரம்பித்தனர். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய சிவா, தான் குடிக்கமாட்டேன் எனவும், தற்போது கூட குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சேர தன்னை அழைப்பார்கள் என நம்புவதாகவும் கூறியிருக்கிறார். காரணம் நிகழ்ச்சியிலிருந்து அவரை வெளியேற்ற வில்லையாம் கொஞ்சம் காத்திருங்கள் மீண்டும் அழைக்கிறோம் என்று கூறியிருக்கிறார்களாம்.
Cook with Comali 4 Wiki, CWC 4 New Season Release Date, Cast, Contestant Names Photos குக் வித் கோமாளி 4 விக்கி, குக் வித் கோமாளி 4 புதிய சீசன் ரிலீஸ் தேதி, பங்கேற்பாளர்கள். போட்டியாளர்கள் பெயர் மற்றும் புகைப்படங்கள் Cook with Comali 4 Wiki, Wikipedia, Review, CWC 4 Start Date, Format, Host, Judges, CWC Season 4 Contestants Names List & Photos, TV Telecast Timings, Promo, Written Updates, TRP Ratings, Hit or Flop: குக் வித் கோமாளி 4 விக்கி, விக்கிப்பீடியா தகவல்கள், ரிவியீ, CWC 4 ஆரம்ப தேதி, வடிவம், தொகுப்பாளர்கள், நடுவர்கள், CWC சீசன் 4 போட்டியாளர்கள் பெயர் மற்றும் புகைப்படங்கள், டிவி டெலிகாஸ்ட் டைமிங்ஸ், புரோமோ, ரிட்டன் அப்டேட்ஸ், டிஆர்பி ரேட்டிங், ஹிட்டா ஃபிளாப்பா? நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 4 Cook with Comali 4 (CWC 4) விரைவில் துவங்க இருக்கிறது. அதே நடுவர்கள், அதே தொகுப்பாளர் ஆனால் 10 புதிய கோமாளிகளுடன் மீண்டும் கோலாகலமாக துவங்க இருக்கிறது குக் வித் கோமாளி. Cook with Comali 4 Reality Show Concept வாரம் இருமுறை ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் 10 போட்டியாளர்களும் 10 கோமாளிகளும் இருப்பார்கள். இவர்களில் குக்குகள் நன்றாக சமைக்கும்போது கோமாளிகள் அவர்களை குழப்பும் வகையில் செயல்படுவார்கள். இவை பார்ப்பதற்கு கலாட்டாவாக இருக்கும். ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கள் நடுவர்கள் சொல்வதற்கேற்ப விதிகளுக்கு உட்பட்டு சமைக்க வேண்டும். இந்த வகையில் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் வெற்றியாளர். கடைசியாக வரும் இருவருக்குள் போட்டி வைத்து அதில் யார் எலிமினேட் என தேர்ந்தெடுப்பார்கள். ஒவ்வொரு முறை சமைக்கும்போது குக்குகள் தங்களின் கோமாளிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அது நேரடியாக இல்லாமல் ஒரு போட்டி வழியில் நடத்தப்படும். Cook with Comali 4 Contestants/Cast/Participants Name with photos விரைவில் அப்டேட் செய்யப்படும் Cook with Comali 4 TRP Rating முதல் சீசனின் TRP 9.75, இரண்டாவது சீசனின் டிஆர்பி 13.97, ஆனால் மூன்றாவது சீசனின் மொத்த டிஆர்பி 8.7. இதனை எப்படியாவது பழைய அளவுக்கு கொண்டு வரத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். Cook with Comali 4 Teaser/Trailer/Promo Disney+ Hostar கடந்த 6 ஜனவரி 2023ம் நாள் இதற்கான புரோமோவை வெளியிட்டிருந்தது. Frequently Asked Questions (FAQs) Q. Who are the anchors of the Cook with Comali 4? A. The anchor of the Cook with Comali 4 is Rakshan. Q. Where can I watch the show Cook with Comali 4 online? A. The show Cook with Comali 4 can be watched online at Disney+Hotstar. Q. When is the launch date of Cook with Komali 4? A. The launch date of Cook with Comali 4 has not yet been released by the channel.