Mon ,Sep 26, 2022

பொன்னியின் செல்வன் 1

படபடவென பொறிந்து தள்ளிய விக்ரம்.... ஏன் ஆதங்கம்..!

UDHAYA KUMAR September 25, 2022

பொன்னியின் செல்வன் புரோமோசன் பேட்டியில் ஹிந்தி ரிபோர்ட்டர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு படபடவென பொறிந்து தள்ளினார் விக்ரம். நாமெல்லாம் இந்தியர்கள். தென்னிந்தியா, வட இந்தியா என்றில்லாமல், நம் மன்னர்களின் பெருமைகளை நாம் தான் கொண்டாட வேண்டும் என்று தஞ்சை வரலாறு பற்றி பெரிய அளவில் பேசினார் விக்ரம்.

Ponniyin Selvan short 3 நந்தினியை எட்டி உதைத்து அவள் காதலனின் தலையைக் கொய்த ஆதித்த கரிகாலன்!

UDHAYA KUMAR September 23, 2022

பொன்னியின் செல்வனில் இப்படி ஒரு விசயம் இருக்கிறதா? ஆதித்த கரிகாலனைக் கொன்று விடுகிறார்கள் என்பதை கேள்வி பட்டோம். ஆனால் அதற்கு என்ன காரணம் என்பதை தெரிந்துகொண்டோமா? வீரபாண்டியன் தலையைக் கொய்த ஆதித்த கரிகாலன், பின்னாளில் பாண்டியர்களின் ஆபத்துதவிகள் மூலமாக கொலை செய்யப்பட்டார் என்பது வரலாற்றறிஞர்கள் கூறும் வரலாறு. நந்தினி, ஆதித்த கரிகாலன் காதலித்ததாக பொன்னியின் செல்வனில் கூறப்படும் கதாபாத்திரம், பெரும்பாலும் கற்பனை கதாபாத்திரமாகத்தான் இருக்கவேண்டும். வரலாற்றில் நடந்த நிகழ்வை புனைந்து சில கதையை சுவாரஸ்யத்துக்காக புகுத்தி பொன்னியின் செல்வனை எழுதியிருக்கிறார் கல்கி கிருஷ்ணமூர்த்தி. வரலாறு இதுதான். ஆதித்த கரிகாலன் போரில் தோற்று புறமுதுகு காட்டி ஓடிய வீரபாண்டியனைத் தேடிச் சென்று அவனை வீழ்த்தி, தலையைக் கொய்துவிட்டு திரும்பி நாடு வருகிறான். பாண்டியன் தலைகொய்த வீரகேசரி எனும் பட்டத்தையும் பெறுகிறான். இதுதான் வரலாற்றில் நிகழ்ந்தது. இதையே கல்கி, தனது பொன்னியின் செல்வன் நாவலில் சுவாரஸ்யமாக்கியிருக்கிறார். கேள்விப்பட்ட சில விசயங்களை வைத்து சில தெரியாத விசயங்களை கற்பனை செய்து புனைந்திருக்கிறார். ஆதித்த கரிகாலன், மதுரை சென்றிருந்த போது ஒரு பெண்ணை பார்த்து மயங்கிவிடுகிறான். பின்னாளில், வீரபாண்டியனைத் துரத்திச் சென்று கொல்லும்போது அவன், தான் மதுரையில் பார்த்த அதே பெண்ணிடம் தஞ்சம் புகுந்திருக்கிறான். அவளோ இவனைத் தன் காதலன் என்று கூறுகிறாள். வெறி தலைக்கேறி, கோபத்தின் உச்சிக்கே சென்ற ஆதித்த கரிகாலன், நந்தினியை தள்ளிவிட்டு, வீரபாண்டியன் தலையைக் கொய்துவிடுகிறான். ஆதித்த கரிகாலன் கடுங்கோபக்காரன். பொன்னியின் செல்வனிலும் சரி, கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளிலும் சரி அவனது கோபம் பல நாடுகளை வென்ற போர்க்குணம் குறித்து பேசப்பட்டுள்ளது. இதன்பின்னர், நந்தினி ஆதித்த கரிகாலனை பழிவாங்கும் எண்ணத்தோடு இருக்கிறாள். அவள் பார்வையில் இருந்த வெறுப்பை பார்த்துக் கொண்டே வந்த ஆதித்த கரிகாலன், அதனால் மனம் நொந்து உள்ளே புழுங்கிக் கொண்டிருக்கிறான். நந்தினியோ பல ஆண்டுகள் கழித்து 60 வயதான பழுவேட்டரயரை மணந்து தஞ்சாவூருக்கு வருகிறாள். மீண்டும் நினைவுக்கு வந்த அவளை நினைத்து, வருந்துகிறான். இப்போதுதான் அந்த வசனம் வந்திருக்கும். "இந்தக் கள்ளும், பாட்டும், ரத்தமும், போர்க்களமும் எல்லாமே அதை மறக்கத்தான்... அவளை மறக்கத்தான்... என்னை மறக்கத்தான்!" இப்படி ஆதித்த கரிகாலன் புலம்புகிறான். இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஆதித்த கரிகாலனுக்கு ஒரு அழைப்பு வருகிறது. கடம்பூர் சம்புவரையர் மாளிகை விருந்தில் கலந்துகொள்ள வருமாறு அந்த அழைப்பு நந்தினி மற்றும் பழுவேட்டரையரிடமிருந்து வருகிறது. அந்த விருந்து நடந்த மாளிகையில் வந்தியத்தேவன், பழுவேட்டரையர், ரவிதாசன், மணிமேகலை உள்ளிட்ட பலர் இருக்கிறார்கள். நந்தினியும், ஆதித்த கரிகாலனும் உணர்ச்சி பொங்க பேசிக்கொள்கின்றனர். திடீரென விளக்கு அணைகிறது.. ரத்த வெள்ளத்தில் அங்கே மிதந்து கொண்டிருக்கிறது ஒரு உடல்... யார் அது? படுகொலையை யார் செய்திருப்பார்? எதற்காக அந்த கொலை நடந்திருக்கும்? - அடுத்த பதிவில் காண்போம்... நாளை...

பொன்னியின் செல்வனும் பத்து கேள்விகளும்...

UDHAYA KUMAR September 22, 2022

பொன்னியின் செல்வன் பார்ட் 1 திரைப்படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில், நாவல் குறித்தும், திரைப்படம் குறித்தும் நிறைய சந்தேகங்களும், கேள்விகளும் மக்களுக்கு இருக்கும். அதனை விளக்கும் வகையில், அந்தந்த கேள்விகளுக்கு பதிலளிக்கலாம் வாருங்கள்.

ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்? | ஆதித்த கரிகாலன் கொலை அதிர்ச்சியூட்டும் பின்னணி

UDHAYA KUMAR September 21, 2022

சங்ககால பார்ப்பனர்கள் என்றால் குடுமி போட்டுக்கொண்டு பூசை செய்து கொண்டு ஹோமம் வளர்த்துக்கொண்டு சாமிக்கு படையல் வச்சிட்டு இருப்பாங்கன்னு நினைச்சீங்களா? சோழன் ஆதித்த கரிகாலனையே கொன்னுருக்காங்க, என்று யூடியூப் சேனல்களில் ஹரி பட வசனத்தை விட ஆக்ரோஷமாக பேசி பல வீடியோக்களைப் பார்த்திருப்போம். ஆனால் இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது? ஆதித்த கரிகாலனை உண்மையிலேயே கொன்றது யார்? உண்மைத் தகவல்களை தெரிந்துகொள்வோம். இது பொன்னியின் செல்வன் - ரீவிசிட்...