Thu ,Dec 08, 2022

சென்செக்ஸ் 62,410.68
-215.68(-0.34%)
நிஃப்டி18,560.50
-82.25(-0.44%)
USD
81.57

தொடரும் மழை

8 ஆம் தேதி தமிழகத்துக்கு காத்திருக்கும் புதிய ஆபத்து.. வானிலை எச்சரிக்கை!!

Sekar December 04, 2022

வங்க கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் நிலையில், வரும் 8 ஆம் தேதி தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி, நாளை குறைந்த காற்றழுத்த பகுதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழகம், புதுச்சேரி கடல் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..

Nandhinipriya Ganeshan November 29, 2022

கேரள கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின்  காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என  சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, தமிழகத்தின் தென்மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தேனி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில்  பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும்  என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, ஈரோடு, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, திருநேல்வேலி, தேனி, தூத்துக்குடி மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

School holiday: கொட்டி தீர்க்கும் கனமழையால், மூன்று மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...

Nandhinipriya Ganeshan November 29, 2022

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நேற்று திடீரென கனமழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. அதேபோன்று மதுரையில் இரவு திடீரென கனமழை வெளுத்து வாங்கியது. நேற்று காலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததோடு பனிப்பொழிவும் இருந்தது. இதனால், மழை எங்கே பெய்யப்போகிறது என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஆச்சர்யம் கொடுக்கும் வகையில் இரவு 8 மணி அளவில் பலத்த மழை பெய்தது. அதேபோல், அண்டை மாவட்டங்களாக விருதுநகர், தேனியிலும் இரவு நல்ல மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதையடுத்து விருதுநகரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி அறிவித்துள்ளார். அதேபோல், தேனி மாவட்டத்திலும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அடுத்த 2 மணிநேரத்தில் இந்த இடங்களில் மழை பெய்யும்.. 

Nandhinipriya Ganeshan November 25, 2022

தமிழகத்தில் 1 அல்லது 2 மணி நேரத்தில் 13 மாவட்டங்களி லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். 

ஜில் ஜில், கூல் கூல்.. கனமழைக்கு ரெஸ்ட்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..

Nandhinipriya Ganeshan November 24, 2022

வட தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (24.11.2022) வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 25.11.2022 முதல் 28.11.2022 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் அடுத்த 24 மணிநேரத்தில் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவாகிறது. இது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறுமா என்பது அடுத்த ஓரிரு நாட்களில் தெரியவரும்.

சூறாவளி காற்று வீசும்...6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை...யாரும் வீட்டை விட்டு வெளிய போகாதீங்க!

Priyanka Hochumin November 21, 2022

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு. தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவியது. அது நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. மிகுந்த வலுப்பெற்ற இந்த மண்டலமானது சென்னையில் இருந்து கிழக்கு, தென் கிழக்கில், 670 கி.மீ., தொலைவில் மையம் கொண்டு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடல் பகுதியை நாளை நெருங்கும்.

பலத்த சூறாவளிக்காற்று...6 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு...மக்களே உஷார்!

Priyanka Hochumin November 17, 2022

இன்று வங்கக்கடலில் அடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் நிலையில், தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளத்தாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக உருவாகியுள்ளதாக அறிவித்துள்ளனர். எனவே, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதிலும் தென்மாவட்டங்களுக்குத் தான் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வட மாவட்டம் மற்றும் உள் மாவட்டங்களுக்கு மழை பெய்யும் வாய்ப்பு குறைவாகவே இருப்பதாகவும் கூறுகின்றனர்.

இந்த ஐந்து நாளைக்கும் மழை வெளுத்து வாங்க போகுது… உஷார் மக்களே…!

Gowthami Subramani November 15, 2022

கிழக்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் சில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன் படி வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டதாவது, 15.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். 16.11.2022: தமிழ்நாடு, புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

தொடர் கனமழையால் தமிழகத்தில் 28 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை..

Nandhinipriya Ganeshan November 12, 2022

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் மிதமானது முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் இந்த கனமழை இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியான அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம்- புதுவை கடற்கரையை நோக்கி நகரக் கூடும். இதனால் தமிழகத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் மற்றும் தட்டச்சு தேர்வுகள் ஒத்திவைப்பு..

Nandhinipriya Ganeshan November 11, 2022

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால், வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இன்று இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, இன்று நடக்கவிருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.