Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57

தொடரும் மழை

வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை..! மக்களே உஷார்.. வெளியில போய்டாதீங்க…

Gowthami Subramani April 22, 2023

சென்னை வானிலை ஆய்வு மையம் ஆனது, நேரடி வெயிலில் செல்வது அசௌகரியத்தை ஏற்படுத்தலாம் என தெரிவித்துள்ளது. இதனால், இன்று தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கழிக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால், ஏப்ரல் 22 முதல் 25 வரை, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனக் குறிப்பிட்டுள்ளது.

ஆஹா.. அடிச்சித் தூக்கப் போகுது மழை..! உங்க இடத்துலயுமானு பாருங்க…

Gowthami Subramani April 01, 2023

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கை குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

மொட்ட வெயில் அடிக்குதுனு கவலைப்படாதீங்க.! ஜோர்னு மழை வரப்போகுது..

Gowthami Subramani March 24, 2023

கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்து வந்தது. மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி வந்தது. இதில், அடுத்த 5 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக,

23 மாவட்டங்களுக்கு பலத்த எச்சரிக்கை.! இதுல உங்க மாவட்டமும் இருக்கானு பாருங்க.. | Rain Status in Tamilnadu

Gowthami Subramani March 23, 2023

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக, ஓரிரு இடங்களில், குறிப்பாக திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

வெளித்து வாங்கப் போகும் கனமழை.! உஷாரா இருந்துக்கோங்க..

Gowthami Subramani March 22, 2023

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரியில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் கனமழை வருவதற்கான வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 22.03.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் டி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 23.03.2023 முதல் 25.03.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 5 நாள்களுக்கு கொட்டோ கொட்டுனு கொட்டப் போகுது.! உஷாரா இருந்துக்கோங்க..

Gowthami Subramani March 17, 2023

தமிழகத்தில் சென்னை மற்றும் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. அடுத்த 5 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

அடிச்சித் தூக்கப் போகும் மழை.! இன்னும் 5 நாளைக்கு விடவே விடாது! | Rain Status in Tamilnadu

Gowthami Subramani March 07, 2023

தமிழகம், புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. அதன் படி, அடுத்த 5 தினங்களுக்கான வானிலை ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

அலர்ட் மக்களே! தமிழகத்தில் நிகழ உள்ள சூறாவளி காற்று.. வானிலை ஆய்வு மையத்தின் பலத்த எச்சரிக்கை!

Gowthami Subramani February 05, 2023

தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்த விவரங்களைப் பற்றி இதில் காண்போம். வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வரும் 12 மணி நேரத்தில் சூறாவளி காற்றூ வீசும் என்று கூறப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளிலும், சூறாவளிக் காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிச்சித் தூக்கப் போகுது இந்த இடத்துல எல்லாம் மழை.! | Rain Alert in Tamilnadu

Gowthami Subramani February 04, 2023

கடந்த 24 மணி நேரத்தில், தமிழக மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. மேலும், புதுச்சேரி பகுதிகளில் மிக லேசான மழை பெய்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா, இலங்கையின் மேற்கு கடலோர பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று (04.02.2023) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவிழக்கக்கூடும்.

8 ஆம் தேதி தமிழகத்துக்கு காத்திருக்கும் புதிய ஆபத்து.. வானிலை எச்சரிக்கை!!

Sekar December 04, 2022

வங்க கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் நிலையில், வரும் 8 ஆம் தேதி தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி, நாளை குறைந்த காற்றழுத்த பகுதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழகம், புதுச்சேரி கடல் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.