Manoj Krishnamoorthi January 01, 2023
இன்று புத்தாண்டின் முதல் நாள், உலகமே இத்தினத்தை நள்ளிரவு முதல் கொண்டாடி வருகிறது. இந்த கொண்டாட்டமான புத்தாண்டில் நம் மனம் கவர்ந்த திரை பிரபலங்கள் என்ன செய்கிறார்கள். அவர்கள் எப்படி புத்தாண்டை வரவேற்கிறார்கள் என்பதை பற்றி காண்போம்.
UDHAYA KUMAR December 24, 2022
ரஜினிகாந்தின் அடுத்த படமான தலைவர் 171 படத்தில் யார் இயக்கப்போகிறார் என்கிற தகவல்தான் இப்போதைய ஹாட் டாபிக். இணையதளம் முழுக்க இதைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பிரதீப் ரங்கநாதன்தான் இந்த படத்தை இயக்கவுள்ளார் என பரவலாக பேச்சு அடிபட்டு வருகிறது. இந்நிலையில், தலைவர் 171 படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கினால், அந்த படத்துக்கும் யுவன் ஷங்கர் ராஜாதான் இசை அமைப்பார் என ரசிகர்கள் பேசி வருகின்றனர். ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். பீஸ்ட் படத்தின் தோல்விக்கு பிறகு அவர் இயக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முறை சூப்பர் ஸ்டார் என்பதால் நிச்சயம் இந்த படத்தை செதுக்கிவிட வேண்டும் என நினைத்து வேலை செய்து வருகிறார் நெல்சன். இந்த படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்தை அவரது மகளே இயக்குகிறார். அதையும் முடித்துக் கொண்டு வரும் சூப்பர் ஸ்டாரை, இயக்கவுள்ளார் பிரதீப் ரங்கநாதன். அநேகமாக இது ரஜினிகாந்தின் கடைசி இரண்டு படங்களில் ஒன்றாக இருக்கும். இதனைத் தொடர்ந்து தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்பராஜ் ஆகியோரிடமும் கதை கேட்டு வைத்திருக்கிறார் ரஜினிகாந்த். இதுவரை ரஜினிகாந்த் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்ததில்லை. இந்த கூட்டணி அமைந்தால் நிச்சயம் பிரதீப் ரங்கநாதன் யுவன்சங்கர் ராஜாவைத் தான் இசைக்காக கேட்பார் என்கிறார்கள். இதன்மூலம் ரஜினி படத்துக்கு இசை அமைக்கவுள்ளார் யுவன்ஷங்கர் ராஜா. விஜய் பட இயக்குநரை தேர்ந்தெடுத்த ரஜினிகாந்த், இப்போதும் விஜய் படத்தை இயக்கவேண்டி காத்திருந்த இயக்குநரைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்கிறார்கள். பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே பட வெற்றிக்கு பிறகு, அதே ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு ஒரு படம் பண்ண வேண்டி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அந்த படத்தில் விஜய்யை நடிக்க வைக்க திட்டமிடப்பட்டிருந்தது. காரணம், விஜய்க்கு ஒரு கதை சொல்லி வைத்திருக்கிறார் பிரதீப். ஏஜிஎஸ் நிறுவனத்திடம் விஜய் நடிக்க ஒரு படமும் பேசப்பட்டிருந்தது. ஆனால் அந்த படத்தை இயக்க விஜய், அட்லீயைத் தேர்வு செய்தார். அட்லீ படத்தின் பட்ஜெட் ஜாஸ்தியாக இருந்ததால், பிரதீப் படத்தை தயாரிக்கலாம் என கணக்கு போட்ட ஏஜிஎஸ்-க்கு இடி மேல் இடி. பிரதீப்பைத் தூக்கிக் கொண்டு போய்விட்டது லைகா நிறுவனம். லைகா நிறுவனத்துக்கு ரஜினிகாந்த் போட்ட ஒப்பந்தப்படி இரண்டு படங்கள் செய்து கொடுக்கவேண்டும். அதில் ஒன்றாக பிரதீப் ரங்கநாதனை ஒப்பந்தம் செய்துவிட்டனர். இதனால் ரஜினி ஏற்கனவே கேட்டு வைத்திருந்த டான் சிபி கதையை நிராகரித்திருக்கிறார்.
UDHAYA KUMAR December 12, 2022
கார்த்திக் சுப்புராஜ் போல, பழைய ரஜினியை மீண்டும் கொண்டு வந்து கண் முன் நிறுத்தியிருக்கிறார் நெல்சன் என ரஜினி ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள். நடிகர் ரஜினிகாந்தின் 72வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகின்றனர் அவரது குடும்பத்தினரும், ரசிகர்களும். வழக்கமாக நடிகர்களின் பிறந்தநாளில் அவர்கள் தற்போது நடித்து வரும் படத்தின் அப்டேட் கொடுப்பது என்பது எழுதப்படாத விதி, தொன்றுதொட்டு நடந்து வரும் சாஸ்திரம். இந்நிலையில் இன்று அதிகாலையிலேயே சொல்லப்போனால் நள்ளிரவே அறிவித்துவிட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம். வழக்கமாக முன்கூட்டியே எந்த அறிவிப்பும் வெளியிடாமல் திடீரென்று அப்டேட் விட்டு சர்ப்ரைஸ் கொடுக்கும் சன்பிக்சர்ஸ் இன்று அதிகாலை முதலே ரசிகர்களை காக்க வைத்தது. நெல்சன் திலீப்குமாரின் படம் என்பதால் கோலிவுட்டின் அத்தனை நடிகர்களின் ரசிகர்களும் காத்திருந்தனர். மாலை 6 மணி ஆகாத குறைதான், கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்களுக்கு விருந்தாக வந்து இறங்கியது ரஜினிகாந்த் தோன்றும் டீசர். வேற லெவல்..வேற லெவல் அட்டகாசம் என டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கொண்டாடிவிட்டனர். கசங்கிப் போன சட்டை, புட்டி கண்ணாடி போட்டு அடக்கமான முக பாவனை காட்டினாலும், கடைசியில் கையில் பட்டாகத்தியை எடுத்து வெறித்தனத்தைக் காட்டிவிட்டார். தரமான சம்பவம், பேட்டை படத்துக்கு பிறகு ரஜினியின் முதல் இம்ப்ரஷனே மிகப் பெரிய வெற்றி. பீஸ்ட் படத்தின்போது நெல்சனை போட்டு அடி வெளுத்தவர்கள் ரஜினி ரசிகர்கள். காரணம் விஜய். ஆனால் இப்போது அவர்களே தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். இப்படியே படத்தையும் வேற லெவலுக்கு எடுத்து குடுத்துடுப்பா சாமி உனக்கு புண்ணியமா போவும் என பேசி வருகின்றனர் ரசிகர்கள்.
UDHAYA KUMAR December 12, 2022
ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்த படமாக உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளான இன்று, சன் பிக்சர்ஸ் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் புதிய படமான ஜெயிலர் படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்று இன்று மாலை வெளியாகும் என கூறியிருந்தது. சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தின் ரஜினிகாந்த் அறிமுக காட்சிகள் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது. இதில் ரஜினிகாந்த் பார்ப்பதற்கு அமைதியான ஆனால் செயலில் காட்டம் காட்டும் RAWவான ஆளாக தோன்றுகிறார். பார்ப்பதற்கு கிட்டத்தட்ட டாக்டர் படத்தின் சாயல் இருப்பதாகவே தெரிகிறது. காரணம் அதேமாதிரியான ஸ்டிஃப்பான தோரணையில், ஷர்ட் இன் செய்துகொண்டு, புட்டி கண்ணாடியில் அறிமுகமாகிறார் ரஜினிகாந்த். நன்றாக யோசித்துப்பார்த்தால் இப்படித்தான் சிவகார்த்திகேயனும் டாக்டர் படத்தில் இருப்பார். ஜெயிலர் படத்தின் தலைப்பே அவரின் கதாபாத்திரத்தைக் கிட்டத்தட்ட உறுதிப்படுத்திவிட்ட நிலையில், அந்த பட்டாகத்தி தான் சம்பந்தமில்லாமல் இருக்கிறது. டார்க் ஹியூமர் ஏதும் முயற்சிக்கிறாரா நெல்சன் என பலரும் பேசி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் இன்னும் இரண்டு நாளைக்கு இதுதான் டாக்.
UDHAYA KUMAR December 12, 2022
ரஜினிகாந்தை காண சென்று மீண்டும் மீண்டும் ஏமாற்றமடைந்த ரஜினி ரசிகர்கள். இது ஒருமுறையல்ல இது மாதிரி பலமுறை நடந்திருக்கிறது என ஆதங்கத்தில் அழுதுகொண்டே சென்ற ரசிகர்கள். பாவம் பாமர ரசிகர்கள் சூப்பர் ஸ்டாரின் மீது வைத்துள்ள பாசம்தான் எத்தனை பெரிது. ரஜினிகாந்த் அவர்களைச் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து சொல்ல அதிகாலை முதலே அவரது வீட்டில் ரஜினி ரசிகர்கள் குவிந்தனர். சூப்பர் ஸ்டாரைப் பார்த்து விட மாட்டோமே அவர் கையசைத்து சிரிப்பதை பார்த்து ரசித்துவிட மாட்டோமா என ஏக்கத்தில் இருந்தார்கள் 50 வயதைக் கடந்த சில ரசிகர்கள். இன்னும் சிலரோ ரஜினிகாந்த் வீட்டுக்கு வந்து வந்து சென்று கொண்டிருந்தனர். காலை முதலே ரஜினி வீட்டில் ஒவ்வொருவராக ரசிகர்கள் பலர் குவிந்த நிலையில், வீட்டிலிருந்து வெளியே வந்த ரஜினிகாந்த் அவர்களின் மனைவி லதா ரஜினிகாந்த், கணகலங்கினார். இப்போது அவர் வீட்டில் இல்லை நீங்கள் வீட்டுக்கு செல்லுங்கள் என்றார். பல ரசிகர்கள் அவரைப் பார்த்த விதம் மிகவும் பரிதாபமாக இருந்தது. அவர்களைப் பார்த்து லதா, ரஜினிகாந்த் அவர்கள் வீட்டில் இல்லை, இருந்திருந்தால் நிச்சயம் உங்கள் அனைவரையும் சந்தித்திருப்பார் என்று கூறிவிட்டு சென்றார். வருத்தத்தில் இருந்த ரசிகர்கள் சிலர். தலைவர் வீட்டுல இல்ல. இருந்திருந்தா ராகவேந்திரா மண்டபத்துலயே ரசிகர்களோட மீட் வச்சிருப்பாரு. கறி சோறு போட்டு விருந்தே வச்சிருப்பாரு என பாவமாக சொல்லிச் சென்றார் அந்த ரசிகர். இது முதல் முறையல்ல பலமுறை ரஜினிகாந்த் அவர்களது வீட்டில் இல்லாத நிலையிலும் அவரது ரசிகர்கள் ரஜினிகாந்த் வீட்டில் கூடி அவரை சந்திக்க வற்புறுத்துவார்கள். ரஜினிகாந்த் அவர்களுக்கு மிகவும் வயதாகிவிட்ட சூழ்நிலையில் அவர் கூட்டமாக யாரையும் சந்திக்கக்கூடாது என டாக்டர்கள் அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
UDHAYA KUMAR December 12, 2022
ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தனது 169 வது படமாக ஜெய்லர் படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தனது மகள் இயக்கும் லால் சலாம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படி அடுத்தடுத்து படங்களைக் கைவசம் வைத்திருக்கும் ரஜினிகாந்த், கார்த்திக் சுப்புராஜ், தேசிங்கு பெரியசாமி, சிபி சக்ரவர்த்தி ஆகிய இயக்குநர்களுடன் இணைய காத்திருக்கிறார். இதில் அதிர்ஷ்டம் சிபி சக்ரவர்த்திக்கு தான் என முதலில் செய்தி வந்தது. அதாவது ரஜினியின் அடுத்த படத்தை அவர்தான் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. பூஜைக்கெல்லாம் தயார் செய்துவிட்ட நிலையில், ஜனவரியில் பூஜை போடவும் வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த திட்டம் மாற்றப்பட்டுள்ளது. ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்க கார்த்திக் சுப்புராஜிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. சிபி சக்ரவர்த்தியின் கதையில் சில மாற்றங்கள் செய்ய சொல்லியிருக்கிறாராம் ரஜினிகாந்த். அதுமட்டுமின்றி அந்த படத்தின் கதை ரஜினியை ஈர்த்தாலும் இப்போது அது சரியாக இருக்காது, இரண்டு படங்களுக்கு பிறகு அதை தொடரலாம் அதற்குள் வேறொரு படத்தை இயக்கிவிட்டு வாருங்கள் என சிபிக்கு சொல்லி அனுப்பியிருக்கிறாராம் ரஜினி. லைகா தயாரிப்பில் விஜய் நடிக்க சிபி சக்ரவர்த்தி கதை நிகழ வாய்ப்பிருப்பதாகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. லால் சலாம் படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜின் வித்தியாசமான திரைக்கதையில் புதிய படம் ஒன்றை மூன்று மாதத்துக்குள் முடித்து விடலாம் அதனைத் தொடர்ந்து தேசிங்கு பெரியசாமி படத்துக்கு 6 மாதங்கள் வரை கால்ஷீட் கொடுக்கலாம் என்றும், சிபி சக்ரவர்த்தி கதையை எப்படி திருத்தியிருக்கிறார் என்பதை பொறுத்து அவருக்கு வாய்ப்பு வழங்கலாமா என்பதை அறிவிக்கலாம் என்கிறார்கள் ரஜினி தரப்பினர். இவை எதுவுமே ரஜினிகாந்திடமிருந்து வெளியே வந்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை என்பதால், பொறுத்திருந்து பார்க்கலாம் யாருக்கு லக் அடிக்கப்போகிறது என்பதை.
UDHAYA KUMAR December 12, 2022
ஸ்டார் ஹோட்டல் ஒன்றிற்கு நண்பரின் உதவியுடன் யாருக்கும் தெரியாமல் சென்று சாப்பிட்டு வந்த ரஜினியை அவமானப் படுத்தி வெளியில் அனுப்பியுள்ளார் அந்த ஹோட்டலின் மேலாளர். இதனால் ரஜினி மிகவும் வேதனையடைந்து வெளியேறியதாக பிரபல இணைய இதழில் தகவல் வெளியாகியுள்ளது. இப்படி ஒரு சம்பவம் நடந்ததா என்பது குறித்து உறுதிப்படுத்தும் வகையில் எந்த தகவலும் இல்லை. ஆனால் இதுகுறித்து சிலர் பேசியிருக்கிறார்கள். ரஜினிகாந்த் ஆரம்ப கால கட்டத்தில் பெங்களூருவிலிருந்து சென்னைக்கு சினிமா விசயமாக அடிக்கடி வந்து செல்வது வழக்கமாம். அப்போதெல்லாம் குறிப்பிட்ட ஸ்டார் ஹோட்டலில் வந்து சாப்பிட்டு செல்வாராம். அங்கு பணிபுரியும் தன்னுடைய நண்பரின் உதவியுடன் அங்கு சாப்பிட்டும் வந்திருக்கிறார். ஒருமுறை அதே ஹோட்டலில் பணிபுரியும் மேலாளர் ரஜினியை அவமானப்படுத்திவிட்டாராம். அதனால் வருத்தத்துடன் வெளியேறிவிட்டார் ரஜினிகாந்த். இதன்பிறகு அந்த ஹோட்டலில் தன்னுடைய திருமண வரவேற்பை வைத்து பழிதீர்த்துக் கொண்டார் என முடிகிறது இந்த கட்டுரை. முதலில் ரஜினி சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பே கண்டக்டராக பணிபுரிந்தவர் என்றாலும் அவர் உண்மையில் திரைப்பட கல்லூரி மாணவர். பெரிய வசதி இல்லை என்றாலும் பணமே இல்லாதவரல்லர். அப்படியே பணம் இல்லாத சமயத்திலும் இதுபோன்ற பெரிய ஹோட்டலுக்கு சென்று திருட்டத்தனமாக சாப்பிட்டிருப்பாரா என்பது ஏற்றுக் கொள்ள முடியாத கூற்று. சரி அப்படியே நடந்திருக்கிறது என்று கூட வைப்போமே.. தான் அவமானப்பட்டால், பிறகு வசதி வந்தவுடன் அந்த குறிப்பிட்ட மேனேஜரை அழைத்து அவருக்கு உதவிகள் செய்து நாணச் செய்திருந்தாலும் கூட அதை ஏற்றுக் கொள்ளலாம். குறிப்பிட்ட ஹோட்டலின் உரிமையாளர் வேறொருவர் தானே. அங்கு தனது திருமண வரவேற்பை வைத்து கொண்டாடியது எப்படி பதிலடி ஆகும்.
UDHAYA KUMAR December 10, 2022
பாபா திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. அதில் ரஜினி அரசியலுக்கு வருவார் என கூறுவாரா என்பது போல ஒரு காட்சி வரும். அது ரீ-ரிலீஸில் எப்படி வரப்போகிறது என ரசிகர்கள் காத்திருந்தார்கள். பாபா திரைப்படம் ரஜினிகாந்த் திரை வரலாற்றில் முக்கியமான படமாகும். காரணம் அவர் தனது சொந்த பணத்தை போட்டு தயாரித்த படம். முதலில் வெளியான போது பயங்கரமான தோல்வியைப் பெற்று நஷ்டமடைந்தது. இதனால் மீண்டும் படத்தை தூசு தட்டி ஏமாந்தவர்களிடம் கல்லா கட்டலாம் என நினைத்துள்ளது படக்குழு. பாபாவை ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்டு லாபம் பார்க்கலாம் என நினைத்தது. ரசிகர்கள் அனைவரையும் தயார் செய்து மீண்டும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் ஈடுபடலாம் என திட்டமிட்டனர். படமும் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அரசியலுக்கு வருவது பற்றிய டயலாக், கிளைமேக்ஸ் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அதில்தான் டிவிஸ்ட் வைத்துள்ளனர். நான் அரசியலுக்கு வருவது உறுதி ஆனா ... அடுத்த ஜென்மத்தில் மீண்டும் பிறந்து அம்மாவோட ஆசைகள நிறைவேற்றுனு பாபாவே உத்தரவிட்டுட்டார்னு படத்தை முடித்திருக்கிறார்கள். என்னது திரும்பவும் முதல்ல இருந்தா என ரசிகர்கள் தியேட்டரை விட்டு ஓடாத குறைதான்.
UDHAYA KUMAR December 10, 2022
நல்ல நல்ல சீன்லாம் கட்.. பாபா நிச்சயம் தோல்வியைத் தான் சந்திக்கும் என ரசிகர்கள் வருத்ததைத் தெரிவித்துவிட்டு செல்கின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு பாபா திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதனை ரஜினி ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்து பார்க்க ஆவலாக இருக்கின்றனர். மாண்டஸ் புயலின் காரணமாக அதிக அளவில் மழை பெய்து வருவதால் படம் பாதிக்கும் என கூறப்பட்ட நிலையில், ரசிகர்கள் ஆங்காங்கே திரையரங்குக்குள் நுழைவதை காண முடிகிறது. மிகவும் ஆர்வத்துடன் வந்திருந்த ரசிகர்களுக்கு பாபா நிச்சயம் பழைய நினைவுகளை மீட்டுக் கொண்டு வரும். 20 வருடங்களுக்கு முன்னர் அவர்களது 35, 40வது வயதுகளில் தியேட்டர்களில் ஆரவாரம் செய்தது, கொண்டாடியது என அனைத்தையும் நினைவுக்கு கொண்டு வரும். அதே நேரம் இந்த கால இளைஞர்கள் சிலரும் ஆர்வக்கோளாறில் முதல் காட்சி காண வந்திருக்கின்றனர். 20 வருடங்களுக்குப் பிறகும் பாபா திரைப்படம் பார்க்க நன்றாக இருக்கிறது. நல்ல ஃபிரஷ்ஷான லுக்கில் இருக்கிறது. படத்தில் கதை இல்லை என்றாலும் ரஜினிக்காகவும், பாபாவுக்காகவும் பார்க்க ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.ஆனாலும் யாரையும் படம் திருப்திப்படுத்தவில்லை என்பது வருத்தமான விசயம்தான். படம் நன்றாக பேசப்பட வேண்டும் என கிளைமேக்ஸ் காட்சியில் மாற்றம் இருக்கும் என கூறி ரசிகர்களை திசை திருப்பியுள்ளனர் என்கிறார்கள். படத்தின் கிளைமேக்ஸ் உட்பட எந்த சீனிலும் மாற்றம் இல்லையாம். ஆனால் பல நல்ல சீன்கள் கட் பண்ணி படத்தை கெடுத்துவிட்டார்கள் என்கிறார்கள் ரசிகர்கள்.
UDHAYA KUMAR December 10, 2022
ரஜினிகாந்த் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கி கடந்த 2002ம் ஆண்டு வெளியான படம் பாபா. இந்த படத்தின் ரிசல்ட் பற்றி இணையத்தில் இருவேறு தகவல்கள் பரவி வருகின்றன. பாபா படம் தோல்வி படம் அல்ல அது சராசரியாக ஓடியது என ரஜினி ரசிகர்கள் இணையதளங்களில் அடித்து விடுகிறார்கள். ஆனால் பாபா படம் வரலாற்றிலேயே ரஜினிக்கு ஏற்படாத தோல்வியைக் கொடுத்த திரைப்படமாகும். ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று அதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பிரம்மாண்டமான வரவேற்பை பெற்றன திரையரங்குகள். காரணம் பாபா ரிலீஸ் ஆகும் திரையரங்குகளிலெல்லாம் ரஜினி ரசிகர்கள் பரபரப்பைக் கூட்டினார்கள். எளிய மனிதர்களான ரஜினி ரசிகர்கள் அன்றைய தினம் வேலைக்கு சென்று சம்பாதித்த தங்கள் உழைத்த பணத்தை அப்படியே எடுத்து செலவிட்டனர். சிலர் பதாகைகள், விளம்பரங்கள் என செலவிட்டாலும் பலர் அதை நல்ல விசயமாகவே மக்களுக்கு செய்தார்கள். ரஜினிகாந்த் போலல்ல ரஜினி ரசிகர்கள் தங்கள் சொந்த பணத்தில் பல நல்ல உதவிகளைச் செய்வார்கள் என ஊரில் பேசுவார்கள். அப்படி பலரின் சேமிப்புகள் கரைந்து உண்டியல்கள் உடைந்து காசுகளெல்லாம் நல உதவிகளுக்கும், மறைமுகமாகவும் நேரடியாகவும் படத்தின் விளம்பரத்துக்கும் பயன்பட்டது. படம் ரிலீஸ் ஆகிறது. காலையில் ஆரவாரத்துடன் திரையரங்குகளை நோக்கி படையெடுத்த ரஜினி ரசிகர்கள் பலர் பாபாவைக் கொண்டாடுகின்றனர். 12 மணி ஆகிறது. படம் சில நிமிடங்களில் பரபரப்பை இழக்கிறது. படம் எதை நோக்கி போகிறது என்பதே புரியவில்லை. கடைசி வரை தலைவர் அரசியலுக்கு வருவாரா என்பதை காணவே நாங்கள் படத்தை சகித்துக் கொண்டு பார்த்தோம் என வெளிப்படையாக பேசும் அளவுக்கு ரசிகர்களே மனம் புண்பட்டு போயினர். இத்தனைக்கும் படம் இரண்டு மூன்று முறை பார்க்கும்போது நன்றாகத்தான் இருப்பதாக தோன்றுகிறது. காரணம் ஃபேண்டஸி. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த படமாக ஆனது பாபா. ஆனால் விநியோகஸ்தர்கள் வீட்டில் அடுப்பு எரிய வேண்டாமா..? அவர்களின் வயிறு அதைவிட கொழுந்துவிட்டு எரிந்தது. படம் வெளியாகி இரண்டே தினத்தில் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார் ரஜினி. அவர் பயந்து ஓடினாரா என சில அரசியல் கட்சி ஆட்கள் கிளப்பி விட்டனர். அந்த சமயத்தில் எழுந்த பிரச்னைகள் பற்றி தெரிந்திருக்கும். ரஜினியின் எத்தனையோ சுமாரான படங்கள் நல்ல வசூலைக் கொடுத்துள்ளன. ஆனால் இந்த படம் தோல்வியடைந்ததற்கு காரணம் அரசியல்தான். அவரைச் சுற்றி செய்யப்பட்ட அரசியலும், அவர் செய்த அரசியலும் என இரு தரப்புக்கும் பங்குள்ளது. அன்று முடிவெடுத்த ரஜினி அதன்பிறகு படத்தை தயாரிக்கவே இல்லை. தன் சொந்த மகள் கேட்டும் படம் தயாரிக்காத ரஜினி, மருமகன் ரஜினி தயாரிப்பில் படம் நடித்து கொடுத்து அவரைக் கடனாளியாக்கியது வேறு செய்தி.