Sun ,Mar 26, 2023

சென்செக்ஸ் 57,527.10
-398.18sensex(-0.69%)
நிஃப்டி16,945.05
-131.85sensex(-0.77%)
USD
81.57

சனிப் பெயர்ச்சி 2023

சங்கடங்களை தீர்க்கும் சனீஸ்வரர் மேற்கொண்ட சோதனைகளைப் பற்றி தெரியுமா? | Shani Dev God of Justice

Priyanka Hochumin January 31, 2023

இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் கர்ம பலனை அளிப்பதற்கு முன்பு சனி பகவான் என்னென்ன சோதனைகளைக் கடந்து வந்திருக்கிறார் தெரியுமா? அதாவது நமக்கு சோதனைகளை தரும் சனீஸ்வரர் எவ்ளோ சங்கடங்களைக் கடந்து வந்திருக்கிறார் என்று தெரிந்துக் கொள்ளலாம். இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து படைப்புகளின் சாட்சியாக மும்மூர்த்திகளிடம் கூறுகிறேன் "நான் என்னுடைய கடமையை ஆற்ற இறுதி வரை பற்றற்று இருப்பேன் என்று உறுதிமொழி அளிக்கிறேன்" என்று கூறுகிறார்.

கர்ம பலன் அளிக்கும் சனியாக உருமாறிய சனீஸ்வரரின் கதை | God of Karma shani

Priyanka Hochumin January 25, 2023

எதனால் சனி பகவான் கர்ம பலன் அளிக்கும் கடவுளாக திகழ்கிறார் தெரியுமா? பிறப்பால் அனைவரையும் சரியான பாதையில் அழைத்துச் செல்ல மூவேந்தர்களால் படைக்கப்பட்ட சக்தி தான் சனீஸ்வரர். இவர் தன்னுடைய கடமைகளை புரிந்து கொண்ட கதைகளைப் பற்றி பாப்போம். ஏனெனில் ஒரு தேவன் என்றுமே தேவலோகத்திற்கே தன்னுடைய ஆதரவை தருவான் என்று நினைக்கிறார். ஆனால் சனீஸ்வரர் அப்படி செய்வாரா என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

எப்படி காக்கை சனீஸ்வரருக்கு வாகனமாக அமைந்தது தெரியுமா? | Lord Shani Vehicle

Priyanka Hochumin January 22, 2023

எப்படி காக்கை சனீஸ்வரருக்கு வாகனமாக அமைந்தது தெரியுமா? சூரிய உதயமாகும் தருணம் என்பதால் சனி பகவான் வேகமாக தன்னுடைய இடத்திற்கு செல்கிறார். அத்தருணத்தில் ஒரு பள்ளத்தில் குதிக்கும் போது அவர் காப்பாற்றிய காகத்தின் மீது சவாரி செய்து தப்பிப்பது விடுகிறார். அப்போது முதல் அந்த காகம் அவரை விட்டு செல்லவில்லை. இதனால் அக்காகம் சனி தேவரின் வாகனமாக மாறியது. இருப்பினும் புராணங்களின் படி, சனீஸ்வரருக்கு காகத்தை தாண்டி நிரைய விலங்குகள் வாகனமாக இருந்ததாக கூறப்படுகிறது.

எதனால் இவருக்கு சனி என்ற பெயர் வந்தது | Shani Meaning in Tamil

Priyanka Hochumin January 19, 2023

நம்முடைய வாழ்வில் ஏதேனும் துன்பங்கள் துயரங்கள் நேர்ந்தால் அதற்கு காரணம் சனி பகவான் என்று பலரும் கருதுகின்றனர். ஆனால் அவர் எந்த அளவிற்கு அனைவரையும் நேசிப்பார் என்று நமக்குத் தெரியாது. கஷ்டப்படுபவர்களுடன் சேர்ந்து அதற்கான பலன் அளிப்பவருக்கும் வேதனை இருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். புராணங்களின் அடிப்படையில் சனி பகவான் பிறப்பின் முக்கியத்துவம் மற்றும் வரலாறு குறித்து ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

இந்த 5 ராசிக்காரர்களையும் கஷ்டத்திலிருந்து காப்பாற்றப் போகிறார் சனி பகவான்! அதற்கு நீங்கள் செய்யவேண்டியவை!

UDHAYA KUMAR January 19, 2023

கடந்த சில ஆண்டுகளாகவே குறிப்பாக சொல்லப்போனால் 2019ம் ஆண்டு பாதியில் துவங்கி, நடந்து முடிந்த 2022ம் ஆண்டு இறுதி வரைக்கும் படாத பாடு பட்ட நீங்கள் வாழ்க்கையில் வெறுமையின் எல்லைக்கே சென்றிருப்பீர்கள். ஏன்டா வாழ்கிறோம் இந்த வாழ்க்கை ஏன் நம்மை போட்டு இந்த பாடு படுத்துகிறது என்கிற அளவுக்கு சோகங்களும், துன்பங்களும் உங்கள் மண்டையைப் பிடித்து ஆட்டியிருக்கும், உங்களை வதைத்திருக்கும். இதற்கெல்லாம் விடிவு காலம் இல்லையா எப்போதுதான் நம் வாழ்வில் வெளிச்சம் பிறக்கும் என நீங்கள் நாட்களை எண்ணி எண்ணி கடந்திருப்பீர்கள். வந்துவிட்டது 2023 இனி நம் வாழ்க்கை பிரகாசம்தான் என நினைத்தாலும் இந்த ஆண்டு துவக்கத்திலும் சில வேண்டாத, வருந்ததக்க விசயங்கள் நடந்திருக்கும். ஒன்று நீங்கள் அதற்கு பழக்கப்பட்டிருப்பீர்கள் இல்லையென்றால் அதனை எதிர்கொள்ளும் ஆற்றலை வளர்த்திருப்பீர்கள். வாழ்க்கை உங்களை பிரட்டி எடுத்தாலும் இனி சற்று நிம்மதி காற்றைச் சுவாசிக்கப்போகிறீர்கள். உங்களுக்கு கொடுத்து உதவப் போவது சனிதான். அவர் உங்களை மகிழ்ச்சியின் பக்கத்துக்கு எடுத்துச் செல்ல இருக்கிறார். சோகங்களையும், தோல்விகளையும் நன்றாகவே கையாண்டு இப்போது வரை துவளாமல் இருக்கும் உங்களைப் போல மொத்தம் 5 ராசிக்காரர்களுக்கு அள்ளிக் கொடுக்கப்போகிறார் சனிபகவான். மேஷம் வேலை வாய்ப்பில் அதிகார யோகத்தை நிச்சயம் பெறுவார்கள். நல்ல நிறுவனங்களிடமிருந்து அழைப்பு வரும். வெளிநாட்டு நிறுவனங்களில் உள்நாட்டிலேயே பணி செய்யும் வாய்ப்புகளும் அவ்வப்போது எதிர்பாராத உதவிகளும் பண வரவுகளும், இந்த வருடத்தில் நீங்கள் இத்தனை வருடங்கள் கடுமையான உழைத்ததற்கான வெகுமதியும் பதவி உயர்வும் கிடைக்கும். இதுவரை கடனில் அவஸ்தைப் பட்டவர்களுக்கு படிப்படியாக சுமை குறைந்து வரும் டிசம்பருக்குள் இதிலிருந்து விடுபட வழி கிடைக்கும். கூடுதல் வருமானத்துக்கான வாய்ப்புகள் பிரகாசம் அதை நீங்கள் சாதுர்யமாக அமைத்துக் கொள்வதில் இருக்கிறது உங்கள் புத்திசாலித்தனம் இதுவரை திருமணம் ஆகாமல் 30 வயதைத் தொட்டவர்கள் மற்றும் கடந்தவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். வரும் வரன்களை மட்டும் பரிசீலிப்பதை விடுத்து நீங்களே கொஞ்சம் முயற்சி செய்து தேடினால் உங்கள் பூர்வீக ஊருக்கு அருகாமையிலேயே வரன் அமையும். தூரத்து சொந்தங்கள் மீண்டும் இதன்மூலம் இணைய வாய்ப்பு ஏற்படும். காதலிப்பவர்கள் வீட்டில் சொல்லிவிடுவது முதலில் சண்டைக்கு வழிவகுத்தாலும் பின் அவர்களே சமாதானம் ஆகி மணமுடித்து வைப்பார்கள். உங்களின் பேச்சில் உறுதித் தன்மையைப் பொறுத்து இதில் வெற்றி தோல்வி ஏற்படும் மிதுனம் தொழிலில் நீங்கள் ராஜாவாக மாறும் வருடமாக இந்த வருடம் அமையப்போகிறது. சனிப் பெயர்ச்சி காரணமாக உங்களுக்கு இதுவரை இருந்த துன்பங்கள் விலகி, சந்தோஷத்துக்கான வாய்ப்புகள் பிரகாசமாகின்றன. உங்களின் சாதுர்யமான பேச்சினால் நட்பு வட்டாரம் அதிகரித்து அதன்மூலம் கிடைக்கும் ஆதாயம் உங்களை பொருளாதார சூழலில் வேறொரு தடத்துக்கு அழைத்துச் செல்ல இருக்கிறது. இதுவரை இழுத்துக் கொண்டிருந்த வேலைகள், விவகாரங்கள், பிரச்சனைகள், பரிவர்த்தனைகள் அனைத்தும் முடிந்து நீங்கள் வெற்றி பெற நீங்களே காரணமாக அமைவீர்கள். கொஞ்சம் ஈகோவை விட்டு கொடுத்து நீங்கள் நேரடியாக இறங்கி பேச்சுவார்த்தை நடத்தினால் சில நொடிகளில் தீரும் விசயங்கள்தான் இவை. முதலீடுகளைக் கவனமாக கையாளுங்கள். உங்களுக்கு இதில் மிகச் சிறந்த லாபம் கிடைக்கப்போகிறது. பொதுவாகவே எடுத்த உடனே லாபம் வாய்ப்பில்லை என்றாலும் இப்போதிருந்தே நீங்கள் கவனமாக அடிஎடுத்து வையுங்கள். அடுத்த பத்து வருடங்களில் நீங்கள் வேறு எல்லையில் பயணித்துக் கொண்டிருப்பீர்கள். ரியல் எஸ்டேட், நிலம், வீடு, மனை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு இந்த ஆண்டு நிச்சயம் மிகச் சிறப்பானதாகும். அரசியல், சமூக சேவை, ஐடிதுறை , மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் என அனைத்து தரப்பு மிதுன ராசிக்காரர்களுக்கும் வெற்றி நிச்சயம் துலாம் குறிப்பிட்ட தொழில் என்று இல்லை எந்த தொழிலை எடுத்தாலும் தொட்டதெல்லாம் பொன் என்பது போல உயர்வடைவீர்கள். ஆனால் பொறுமை மிக அவசியம். கவனக்குறைவு அலட்சியம் உங்களிடத்தில் இருந்தால் அதை எப்படி நீக்கி தொழிலில் முன்னேற்றம் அடைவது என்பதை நீங்கள்தான் கற்றுக் கொள்ள வேண்டும். எதிர்பாராத இடங்களிலிருந்தெல்லாம் உங்களுக்கு நிதி ஆதாயம் கிடைக்கப்பெறும். திருமண வயதைத் தொட்டவர்களுக்கு இப்போதே திருமண ஏற்பாடு செய்வது நல்லது. இருந்தாலும் மணம் செய்பவர்களின் கருத்துக்களைக் கேட்டு அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப முடிவெடுக்க வேண்டும். பெரியவர்களின் தலையாயக் கடமை என்பது தங்கள் பிள்ளைகளின் உண்மையான ஆசைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்ற வேண்டும் என்பதே. அதனை மீற வேண்டாம். முக்கியமாக துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் திருமணம் விரைவில் கைக்கூடும். நிதி பிரச்னைகள், உடல் நல பிரச்னைகள் தீரும். ஆனால் கவனமுடன் செயல்பட்டு அவ்வப்போது உடல் பரிசோதனையைச் செய்துகொள்ளுங்கள். தனுசு பதவி உயர்வு, நீங்கள் விரும்பிய பதவி, விருப்பமான இடமாற்றம், நல்ல நிறுவனங்களில் வேலை மற்றும் சலுகைகள் என தனுசு ராசிக்காரர்களுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும். காதல் திருமணத்தில் மிகப் பெரிய குழப்பங்கள் இதுவரை நடந்து வந்திருக்கும். இனி அதைப் பற்றி கவலை கொள்ளாமல் கரியரில் கவனம் செலுத்துங்கள். திருமணம் ஆகவில்லை என்றாலோ காதலிக்கிறீர்கள் என்றாலோ கவலை இல்லை உங்கள் பிரச்னைகள் அனைத்தையும் சனிபகவான் தீர்க்கப்போகிறார். மகரம் ஆசைகளை நிறைவேற்றும் ஆண்டாக அமையும். சனி பகவானின் அருளால் உங்கள் கஷ்டங்கள் நீங்கி நினைத்தவற்றை நிறைவேற்றும் நாள் நெருங்கிவிட்டது. ஏற்கனவே சில விசயங்களைத் தொடங்கி இருப்பீர்கள். சிலருக்கு வாகனம் வாங்கும் சக்தி அதிகரித்திருக்கும். லோன் மூலம் வாங்கி பணத்தை விரயம் செய்யவேண்டாம். ஆனால் தொழிலில் முதலீடாக வாகனத்தை வாங்குவது நல்ல ஏற்பாடாகவே இருக்கும்.

ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டமத்து சனி - எது அதிக ஆபத்து? | Different Types of Sani Dhosam

Nandhinipriya Ganeshan January 18, 2023

நவக்கிரங்களில் நீதி பகவானாக விளங்குபவர் சனி பகவான். இவர், இரண்டரை ஆண்டுகள் ஒரு ராசியில் சஞ்சரிப்பார். அந்தவகையில், 12 ராசிகளையும் கடப்பதற்காக 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார். பொதுவாக, நம்முடைய ஜாதகத்தில் எந்தவகையான சனி இருக்கிறதோ, அதை பொறுத்தே நன்மையும் தீமையும் நிகழும். அந்தவகையில், எத்தனை வகையான சனிகள் இருக்கின்றன; அவை என்ன மாதியான தாக்கத்தை ஏற்படுத்தும்; அந்த தாக்கத்தை குறைக்க என்ன பரிகாரம் செய்யலாம் என்பது பற்றி பார்க்கலாம்.

சனி பெயர்ச்சி 2023 எப்போது? நேரம்? | Sani Peyarchi 2023 Timings

Nandhinipriya Ganeshan January 17, 2023

மனிதர்கள் மட்டுமல்லாது உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து உயிர்களுக்கும் வினைகளுக்கு ஏற்ப கர்ம பலன்களை அள்ளிக் கொடுப்பவர் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். அதுமட்மல்லாமல், நவகிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனி கிரகம். அதனாலேயே இவர் சனீஸ்வரன் என அழைக்கப்படுகிறார். ஒருவர் ஜாதகத்தில் ஆயுள் ஸ்தானத்தின் அதிபதி பலம் குன்று இருந்தாலும் தொழில், கர்மா, ஆயுள் இந்த மூன்றுக்கும் அதிபதியான சனி பகவான் பலமாக இருந்தால் ஆயுள் தீர்க்கம் கிடைக்கும் என்பது ஐதீகம். நம்முடைய ஜாதகத்தில் சனிபகவான் இருக்கும் இடத்தை வைத்தே தடைகளை எளிதாக அறிந்து கொள்ள முடியும். இருப்பினும் சனிபகவான் எங்கு அமர்ந்திருக்கிறாரோ அதற்கு ஏற்ற பரிகாரங்களை செய்வதன் மூலம் நம் வாழ்வில் ஏற்படும் தடைகளை அகற்ற முடியும். அந்தவகையில், 2023 ஆம் ஆண்டிற்கான சனிப்பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கத்தின்படி ஜனவரி 17 ஆம் தேதி மாலை 06.04 மணிக்கு மகர ராசியில் இருந்து தனது சொந்த ராசியான கும்ப ராசிக்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு பெயர்ச்சியாகிறார். அதேசமயம் வாக்கிய பஞ்சாங்கப்படி வரும் மார்ச் மாதம் 29ஆம் தேதி அன்று சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடையப்போகிறார்.

அர்த்தாஷ்டம சனியில் இருந்து விடுபட எளிய பரிகாரங்கள் | Arthashtama Sani Pariharam in Tamil

Nandhinipriya Ganeshan January 17, 2023

நவக்கிரகங்களில் நீதிகாரகனாக விளங்கும் சனிபகவான், ஒருவரது ஜாதகத்தில் 1 முதல் 12 கட்டங்களில் பயணம் செய்வார். அவ்வாறு சனிபகவான் பயணிக்கும் ஒவ்வொரு கட்டங்களுக்கும் ஒவ்வொரு பெயரால் அழைக்கப்படும். அப்படி பயணம் செய்யும்போது, ஒவ்வொரு நிலையிலும் பல நன்மைகளையும், சில இன்னல்களையும் கொடுப்பார். அந்தவகையில், அர்த்தாஷ்டம சனி காலத்தில் சனி பகவான் எந்தமாதிரியான பலன்களை கொடுப்பார், அதற்கான பரிகாரங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

ஏழரை சனியில் இருந்து விடுபட எளிய பரிகாரங்கள் | Ezharai Sani Pariharam in Tamil

Nandhinipriya Ganeshan January 17, 2023

நீதி பகவானாக பார்க்கப்படும் சனி பகவானின் ஆதிக்கம் தான், நம் வாழ்க்கையின் சகலத்துக்கும் காரணம். ஒருவர் தன் கடமை, நேர்மையில் இருந்து தவறும் போது அதற்கான தண்டனையை, சனி பகவான் ஏழரை சனி வரும்போது கடுமையாக தண்டிப்பார். அதனால் தான் சனிப்பெயர்ச்சி என்றாலே நாம் பயப்படுகிறோம். என்ன ஆகுமோ, எப்படி இருக்குமோ? என்று நடுங்குவோம். ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்களின் நெஞ்சங்களிலும் பயத்தை கொடுப்பவர் சனி பகவான்.  பொதுவாக, ஜோதிடத்தின் பார்வையில் சனி பகவான் இரண்டரை ஆண்டுகள் ஒரு ராசியில் சஞ்சரிப்பார். அந்தவகையில், 12 ராசிகளையும் கடப்பதற்காக 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார். இவ்வாறு ஒவ்வொரு முறையும் சனிபகவான் பெயர்ச்சி அடையும்போது அனைத்து ராசிகளிலும் ஆக்கப்பூர்வமானதாக இருப்பதில்லை. அந்தவகையில், ஏழரை நாட்டு சனி என்றால் என்ன? ஏழரை நாட்டு சனி காலத்தில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை பற்றி பார்க்கலாம்.

சனிப்பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு அடிக்கும் விபரீத ராஜயோகம்.. | Sani Peyarchi 2023 Palan in Tamil

Nandhinipriya Ganeshan January 16, 2023

சனி பகவானின் ஆட்சி வீடு கும்ப ராசியாகும். தற்போது மகர ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் நீதிகாரகனான சனிபகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, வருகின்ற 17 ஆம் தேதி தனது சொந்த ராசியான கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்த பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரப்போகிறார். இருப்பினும், சனிப்பெயர்ச்சியானது சில ராசிக்கு ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி போன்றவற்றை ஏற்படுத்தும் அதேப்போல் சில ராசிக்கு ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி விலகும். அந்தவகையில், இந்த பெயர்ச்சியின் மூலம் மிதுன ராசிக்காரர்களுக்கு பாக்ய சனியாக 9ஆம் வீட்டில் சனிபகவான் அமர்கிறார். அதேபோல், கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்து சனியாக பயணம் செய்கிறார். இத்தகைய மாற்றத்தினால் கடக, மிதுன ராசியினர் எம்மாதிரியான பலன்களை பெற போகிறார்கள் என்பதை பற்றி பார்க்கலாம்.