Sun ,May 28, 2023

சென்செக்ஸ் 61,291.57
-140.17sensex(-0.23%)
நிஃப்டி18,070.15
-59.80sensex(-0.33%)
USD
81.57

Startup Events 2023

பரிசுத் தொகையுடன் கூடிய ஸ்டார்ட் அப்களுக்கான ஹேக்கத்தான் நிகழ்ச்சி..! | StartupTN Events

Gowthami Subramani January 18, 2023

ஸ்டார்ட் அப் தமிழ்நாடு மதுரை மண்டல மையமானது, StartupTN DevHack 2023 Hackathon என்ற நிகழ்ச்சியை மதுரையில் நடத்த உள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொள்பவர்களுக்குப் பரிசுத் தொகையை வழங்க திட்டமிட்டுள்ளது. ஹேக்கத்தான் நிகழ்ச்சி குறித்த விவரங்களை இந்தப் பதிவில் காணலாம். மதுரையில் ஒரு நாள் நிகழ்வாக நடைபெறும் இந்த ஸ்டார்ட் அப் நிகழ்ச்சியானது, Internet of Things (IoT) –ஐ அடிப்படையாகக் கொண்டுள்ளது. அதன் படி, இந்த IoT அடிப்படையிலான தொழில்நுட்பங்கள் மூலமாக, உண்மையான சிக்கல்களைத் தீர்ப்பதற்கு உழைக்கும் வல்லுநர்களும், மாணவர்களும் ஒன்றிணைய வேண்டும்.

நம்ம ஈரோட்டில் தொழில்முனைவோர்களுக்கான ஸ்டார்ட் அப் பொங்கல்! | Startup Pongal

Gowthami Subramani January 10, 2023

தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் திருவிழாவைக் கொண்டாடும் விதமாக, ஸ்டார்ட் அப் தமிழ்நாடு ஈரோடு மண்டல மையம் ஸ்டார்ட் அப் பொங்கல் விழாவை நடத்த உள்ளது. இந்த நிகழ்வு நடைபெறும் இடம், நேரம் மற்றும் முக்கிய நோக்கம் குறித்த விவரங்களைப் பற்றி இதில் காணலாம்.

தமிழ் தொழில்முனைவோர்களுக்காக சென்னையில் முதல் முறையாக நடக்கும் சர்வதேச உச்சி மாநாடு!| Global Tamil Startup Investors Summit

Gowthami Subramani December 27, 2022

FiTEN என்ற FeTNA சர்வதேச தொழில் முனைவோர் வலையமைப்பு, தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் உடன் இணைந்து சென்னையில் உச்சி மாநாட்டை நடத்துகிறது. இதன் மூலம், தமிழ்நாட்டில் உள்ள ஸ்டார்ட் அப்கள் மற்றும் உலகளவில் உள்ள தமிழ் முதலீட்டார்களுக்குப் பயனளிப்பதாகவும், வணிகத்தை மேம்படுத்துவதற்கும் நடத்தப்படுவதாகும். FeTNA வின் வருடாந்திர மாநாடுகளின் ஒரு பகுதியாக நடத்தப்படும் இந்நிகழ்வு வழக்கமாக அமெரிக்காவில் நடைபெறும். ஆனால், இந்த முறை சென்னையில் முதன் முறையாக நடைபெற உள்ளது.