Manoj Krishnamoorthi September 08, 2023
ஈசனின் மகன் விக்னேஸ்வரனின் பார்வை நம் மீது இருந்தால் எந்த சங்கடமில்லாமல் வாழலாம், நமக்கு இமை நோகும் சங்கடம் வந்தாலும் கணபதி சங்கடங்களைத் தீர்த்து இன்பமான வாழ்வு அளிப்பார். நம் மனதில் விழா கோலம் கொள்ளும் விநாயகர் சதுர்த்தினத்தில் எந்த நேரத்தில் பூஜை செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும், வீட்டில் சிலை வைக்கலாமா, எப்படி நைவேத்தியம் தயார் செய்வது போன்ற கேள்விக்கு பதிலாக காலையில் வாசலில் போடும் கோலம் முதல் பூஜையில் வைக்கும் நைவேத்தியம் வரை அனைத்தையும் கீழ்க்காண்போம்.
Gowthami Subramani September 08, 2023
நம் வாழ்க்கையில் சந்திக்கக் கூடிய இன்னல்கள் அனைத்தையும் நீக்கி அனைத்து வளங்களையும், செல்வ செழிப்பையும் அளிக்கக் கூடிய இறைவனாய் நம்மைக் காப்பவன் விநாயகப் பெருமான். ஆனை முகத்தான் எனப் போற்றப்படும் விநாயகப் பெருமானின் சிறப்பை அறியாதோர் இந்த உலகத்தில் எவருமிலர். நம் கர்ம வினைகளைத் தீர்த்து, பாவங்களை நீக்கும் விநாயகப் பெருமானுக்கு மிகச் சிறப்பான நாளாக நாம் கொண்டாடுவது விநாயகர் சதுர்த்தி. கடவுளுக்கு நாம் படைக்கக் கூடிய பூவாக இருந்தாலும், பழமாக இருந்தாலும், பிரசாதமாக இருந்தாலும் ஒவ்வொன்றிற்கும் ஒரு காரணம் உண்டு.
Nandhinipriya Ganeshan September 07, 2023
விநாயகர் சதுர்த்தி என்றாலே கொழுக்கட்டை தான். அந்த பத்து நாட்களுக்கு எந்த கோவிலில் பார்த்தாலும் கொழுக்கட்டை மணம் தான் வீசும். அதுமட்டுமல்லாமல், வீட்டிலும் விநாயகருக்கு பிடித்த உணவான கொழுக்கட்டையை செய்து நைவேத்தியம் படைத்து வழிபடுவார்கள். இதை மோதகம் என்று அழைப்பதுண்டு. ஆனால், கொழுக்கட்டையை பலவிதமாக செய்யலாம். அந்த வகையில், தற்போது ஒரு வித்தியாசமான கொழுக்கட்டையை தான் எப்படி செய்வது என்று பார்க்கப்போகிறோம். இந்த கொழுக்கட்டையின் ஸ்பெஷாலிட்டியே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வாழைப்பழத்தை கொண்டு செய்வதுதான்.
Nandhinipriya Ganeshan September 07, 2023
அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த விநாயகர் சதுர்த்தி பண்டிகை வந்துவிட்டது. அனைவரும் வீட்டில் விநாயகருக்கு பிடித்த பல இனிப்பு பலகாரங்களை செய்ய தயாராகிக் கொண்டிருப்பார்கள். அந்த வகையில், விநாயகர் சதுர்த்தி என்றாலே மோதகத்திற்கு அடுத்து நம் நினைவுக்கு வருவது லட்டு தான். விநாயகருக்கு நைவேத்தியமாக படைக்கப்படும் ஒரு இனிப்பு பலகாரங்களில் இந்த மோத்திசூர் லட்டை வீட்டிலேயே மிகவும் சுலபமாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Nandhinipriya Ganeshan September 07, 2023
விநாயகர் சதுர்த்தி என்றாலே நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கொழுக்கட்டை தான். ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தி நாளில் விநாயகப் பெருமானுக்கு மிகவும் பிடித்த கொழுக்கட்டையை செய்து நைவேத்தியம் படைத்து வழிபாடு செய்வது வழக்கம். இந்த சுவையான கொழுக்கட்டையை பல விதமாக செய்யலாம். அந்தவகையில், வித்தியாசமான சுவையில் கோதுமை மாவை கொண்டு தேன் கொழுக்கட்டை எப்படி செய்வது என்று இப்பதிவில் பார்க்கலாம். இது செய்வது மிகவும் எளிது.
Manoj Krishnamoorthi September 07, 2023
எந்த ஒரு சுப காரியம் செய்தாலும் அங்கு முதலில் விநாயகர் வழிபாடு இருக்கும், நம் கையால் மஞ்சள் கொண்டு ஒரு பிள்ளையார் செய்து அதை வணங்கி தான் ஆரம்பிப்போம். முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானின் விஷேசமான தினத்தில் திருமணம் செய்யலாமா...? அப்படி செய்தால் நன்மையா...! எனப் பலக் கேள்விகள் நம் மனதில் உதிக்கும். உங்களின் மனதில் இருக்கும் அந்த கேள்விக்கு பதிலாக இந்த பதிவு இருக்கும்.
Manoj Krishnamoorthi September 07, 2023
சங்கடம் தீர்க்கும் கணபதியாரின் விஷேசமான நாள், விநாயகர் சதுர்த்தி ஆகும். சினிமாவில் டைட்டில் சாங் தொடங்கி கிளைமேக்ஸில் ஊர்வலமாகக் கணேசனை சினிமாவில் பயன்படுத்தாது இடமே இல்லை.... சினிமா எங்க இருந்து வந்தது நம் வாழ்வின் ஒரு சில நிகழ்வுகளைப் பொழுதுபோக்கு அம்சங்கள் கலந்து சொல்வது தான் சினிமா ஆகும். ரீலும் சரி ரியலிலும் சரி விநாயகர் வழிபாடு என்றாலே கொண்டாட்டம் தான். திருவிழா கொண்டாட்டம் கொண்ட விநாயகர் சதுர்த்தி தினத்தன்று வீட்டிலே விநாயக பெருமானை வழிபடுவது எப்படி என்று என்பதைப் பற்றி அறிய வேண்டுமா.....? இந்த பதிவு உங்களுக்கு சிறந்த வழிகாட்டலாக இருக்கும்.
Nandhinipriya Ganeshan September 06, 2023
அனைவரும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த விநாயகர் சதுர்த்தி வந்துவிட்டது. பிள்ளையார் பிறந்தநாளான இந்த மங்களகரமான நாளில் புதிய சிலை வாங்கி வைத்து அவருக்கு பிடித்த உணவுகளான சுண்டல், விதவிதமான கொழுக்கட்டை, வடை, லட்டு, பாயசம், எள்ளு உருண்டை, அப்பம் போன்றவற்றை தயார் செய்து நைவேத்தியமாக படைத்து வழிபாடு செய்வோம். விநாயகர் சதுர்த்தியை நாள் தொடங்கி அடுத்த மூன்று நாட்களும் எங்கு பார்த்தாலும் பெரிய பெரிய விநாயகர் சிலைகள் வைத்து காலை மற்றும் மாலை வேளையில் பூஜை செய்து பிரசாதம் வழங்குவார்கள். இந்த விநாயகர் சதுர்த்தியை நாம் பிள்ளையர் சதுர்த்தி என்றும் அழைப்பதுண்டு.
Gowthami Subramani September 06, 2023
முழு முதற்கடவுளாய், அனைவரின் இன்னல்களையும் தீர்த்து, எல்லோருக்கும் நன்மை அளிப்பவனாய் இருப்பவனே விநாயகப் பெருமான். விநாயகப் பெருமானைப் போற்றும் வகையில், மிகச் சிறந்த நாளாக அமைவது விநாயகர் சதுர்த்தி தினம் ஆகும். இந்த தினத்தில், பொதுவாக, இலைகள், பழங்கள், மலர்கள் என ஒவ்வொன்றையும் 21 வகைகளில் படைக்கப்பட்டு விநாயகப் பெருமானை வணங்கினால், சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்பது ஐதீகம். இறைவனுக்கு படைக்கும் ஒவ்வொரு பொருளும் பல்வேறு நன்மைகளைத் தருபவையாக உள்ளன. அந்த வகையில், படைக்கப்படும் உணவுகள் நமக்கு மருந்தாகவே உள்ளது. அந்த வகையில், விநாயகப் பெருமானுக்கு படைக்கப்படும் 21 இலைகள், 21 மலர்கள், 21 பழங்கள் போன்றவற்றைப் பற்றிக் கட்டாயம் தெரிந்து கொள்வது அவசியம். இந்தப் பதிவில், விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானுக்குப் படைக்க வேன்டிய 21 இலைகளின் வகைகளைப் பற்றிக் காண்போம். இந்த 21 வகையான பச்சிலைகளை வைத்து வழிபட, நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறி, சிறப்பான பலன்களைப் பெற முடியும். அதே போல, இதில் குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு இலையும் ஒரு சிறப்பான பலனைத் தருவதாக உள்ளன. முல்லை இலை வில்வ இலை அருகம்புல் கரிசலாங்கண்ணி இலை இலந்தை இலை ஊமத்தை இலை கண்டங்கத்தரி இலை வன்னி இலை நாயுருவி இலை அரளி இலை எருக்கம் இலை மருத இலைகள் மாதுளை இலை தேவதாரு இலை மரிக்கொழுந்து இலை விஷ்ணுகிராந்தி இலை அரச இலை தாழம்பூ இலை ஜாதிமல்லி இலை அகத்தில் இலை தவனம் இந்த ஒவ்வொரு இலைகளையும், விநாயகருக்கு படைத்து வழிபடுவதன் மூலம், நல்ல சிறப்பான பலன்களைப் பெறலாம் எனக் கூறப்படுகிறது.
Gowthami Subramani September 06, 2023
விநாயகர் சதுர்த்தி எல்லோராலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் மாபெரும் சிறப்புப் பண்டிகையாகும். இந்த தினத்தில், அனைவருக்கும் வீட்டில் என்ன கோலம் போடலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பர். அவர்களுக்கான பதிவு தான் இது. இதில், விநாயகர் சதுர்த்தி தினத்தன்று போடுவதற்கான விநாயகருக்குச் சிறப்பு மிக்க சில கோலங்களைப் பற்றிப் பார்ப்போம். இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ள விநாயகர் கோலங்களை உங்கள் வீட்டு வாசலில் போட்டால், விநாயகரே உங்கள் வீட்டிற்கு வந்து காட்சி தருவது போலத் தோன்றும்.