Tap to Read ➤
3 fruits to avoid during cough | fruits to avoid during cough and cold
குளிர் காலத்தில் இந்த பழங்களை குழந்தைகளுக்கு கொடுக்கவே கூடாது
குளிர் காலம் வந்தாலே காய்ச்சல், சளி, மற்றும் இருமல் போன்றவை அதிகம் ஏற்படும். இதனால் நோய் தொற்றுகளை எதிர்த்து போராட உதவும் உணவுகளை உட் கொள்ள வேண்டும்.
குளிர் காலத்தில் குழந்தைகள் காய்ச்சல், சளி, மற்றும் இருமலால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இதனால் பெற்றோர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாவார்கள்.
குளிர் கால மாதங்கள் குளிர்ந்த காற்றுக்கு பெயர் போனவை. இந்த மாதத்தில் நோய் தொற்று சீக்கிரம் வந்து விடும். குழந்தைகள் என்னும் போது சொல்லவே தேவை இல்லை.
இந்த நோய் தொற்றுகள் குழந்தையின் நாளை முற்றிலும் பாதித்து அவர்களை மிகுந்த சோர்வாக்கி விடும். இதனால் குழந்தைகளுக்கு கூடுதல் கவனிப்பு தேவை .
இந்த குளிர் காலத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கவே கூடாத பழங்கள் என்னவென்று இதில் பார்ப்போம்
ஸ்ட்ராபெர்ரி, திராட்சை மற்றும் லிச்சி ஆகிய பழங்களை குளிர் காலத்தில் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்க கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
குழந்தைகள் இருமலால் பாதிக்கப்பட்டு இருக்கும்போது இவற்றை சாப்பிட கொடுக்க கூடாது.
ஸ்ட்ராபெரி ஹிஸ்டமைனை வெளியிடுவதால் இருமலை தூண்டுகிறது.
திராட்சை மற்றும் லிச்சி பழங்களில் இயற்கையாகவே சர்க்கரை அதிகமாக உள்ளதால், இது நோய் தொற்றை ஏற்படுத்தும் பாக்டீரியாவை வளர வைத்து விடும்.
இதனால் இந்த மூன்று பழங்களையும் குளிர் காலத்தில் குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது
மேலும் தவிர்க்க வேண்டியவை :
ஐஸ்கிரீம், சாக்லேட்கள்
மிட்டாய்கள், பேஸ்ட்ரிகள்
டோனட்ஸ், கேக்
குளிர்ச்சியான பொருட்கள்