Tap to Read ➤

அவதார் 2

பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவரும் அவதார் 2-ம் பாகம்.. பட்ஜெட் எவ்வளவு தெரியுமா..?
கடந்த 2009 ஆம் ஆண்டு ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த அவதார் உலகம் முழுவதும் அமோக வரவேற்பைப் பெற்றது.
13 ஆண்டுகள் கழித்து, இதன் இரண்டாம் பாகம் உருவாகி இதற்கு அவதார் 2: தி வே ஆஃப் வாட்டர் என பெயரிடப்பட்டுள்ளது. இது வரும் டிசம்பர் 16 ஆம் நாள் வெளியிடப்பட உள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகள் உள்பட 160 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
அவதார் காடுகளை மையப்படுத்தி படம் வெளியான நிலையில், அவதார் 2 தண்ணீரை மையப்படுத்தி வெளியாக எடுக்கப்பட்டுள்ளது.
தண்ணீருக்குள் வாழ்வதை கற்பனை செய்ய முடியாத அளவுக்கு கிராஃபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
250 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ள  இந்தப் படம் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்தப்படத்தில் சாம் வொர்த்திங்டன், ஜோ சல்டனா, கேட் வின்ஸ்லெட், ஸ்டீபன் லாங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
3D -ல் வெளியாக உள்ள இப்படத்திற்கு உலகம் முழுவதும் திரையரங்குகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. அவதார் 1-ஐப் போல, அவதார் 2-ம் அதிக அளவு வசூல் ஈட்டும் எனக் கூறப்படுகிறது.
ஹைதராபாத்தில் உள்ள பிரசாத் என்ற ஸ்டுடியோவில் அவதார் 2 படத்திற்காக 64 அடி உயரம் மற்றும் 101 அடி அகலத்தில் பிரம்மாண்ட ஸ்க்ரீன் அமைக்கப்பட்டுள்ளது.
டிரெய்லரில் இடம்பெற்றுள்ள பிரமிப்பான காட்சிகள், படத்தின் மீதான ஈர்ப்பை அதிகரிக்கச் செய்வதாக உள்ளது.
Click Here