வீக்கத்தை தடுக்க குளிர் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்
குளிர் காலம் எவ்வளவு அழகாக இருந்தாலும், அது பல உடல் நல சிக்கலை தருகிறது. வயதானவர்கள் மற்றும்
பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு குளிர் காலம் மிகவும் கடுமையாக இருக்கும் .
கடுமையான குளிர் சளி, இருமல் மற்றும் நாள்பட்ட அழற்சி போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாக்குகிறது.
இந்நிலையில், ஆரோக்கியமான உணவே நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் வீக்கத்தையும் தடுக்கும்.
குளிர் காலத்தில், குளிர்ந்த கால நிலை காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் போன்ற சுவாச நோய்களின்
அபாயத்தை அதிகரிக்கிறது. இது உடலில் வீக்கத்தை கொடுக்கும்.
வீக்கம் என்பது காயம், தொற்று அல்லது நோயெதிர்ப்பு மண்டலத்தின் இயல்பான பிரதிபலிப்பு.
வீக்கத்தின் அறிகுறிகளில் சிவத்தல் மற்றும் வலி ஆகியவை அடங்கும்.
உடலில் நாள்பட்ட அல்லது நீடித்த வீக்கம் இருந்தால் அது தீங்கு விளைவிக்கும் நீரிழிவு,
இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்களுக்கு வழி வகுக்கும்.
வீக்கம், குறிப்பாக குளிர் காலத்தில் மிகவும் மோசமாகிறது. இது உடலில் வலி மற்றும் அசௌகரியத்திற்கு வழி வகுக்கிறது.
வீக்கத்தை தடுக்க தவிர்க்க வேண்டிய உணவுகளை பற்றி இதில் பார்க்கலாம்.