Tap to Read ➤

இந்த பழங்களை சாப்பிட்ட பின் தண்ணீர் குடிக்காதீங்க.. ஆபத்து!

தர்பூசணி பழம்

 தர்பூசணி பழம் அல்லது ஜூஸ் எடுத்துக்கொண்டதும் தண்ணீர் குடித்தால், நம் செரிமான செயல்பாட்டை மெதுவாக்குமாம். அதேசமயம், நெஞ்செரிச்சல் - அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளுக்கும் வழிவகுக்குமாம்.
அன்னாசி பழம்

 அன்னாசி பழம் அதிக அமிலத்தன்மை கொண்டவை. இதை வேக வேகமாக சாப்பிடுவதும், சாப்பிட்ட பின்னர் தண்ணீர் பருகுவதும் நல்லது அல்ல. ஏனென்றால், இது மென்மையான குடல் திசுக்களை பாதித்து, செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
முலாம்பழம்

 நீர்ச்சத்து அதிகம் இருக்கும் பழங்களில் இந்த முலாம்பழமும் ஒன்று. இந்த பழத்தை சாப்பிட்ட பின் உடனடியாக தண்ணீர் குடித்தால், செரிமான அமைப்பின் pH அளவை சீர்குலைக்கும். அதுமட்டுமல்லாமல், முலாம்பழம் அல்லது ஜூஸ் எடுத்துக்கொண்டதும் தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனையும் ஏற்படும்.
ஆரஞ்சு பழம்

 ஆரஞ்சு பழம் சிட்ரஸ் பழம் என்று நம் அனைவருக்குமே தெரியும். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்குகிறது. இருப்பினும், ஆரஞ்சு பழத்தினை சாப்பிட்டு குறைந்தது அரை மணி இடைவெளி விட்டு தண்ணீர் குடிப்பது நல்லது. இல்லையெனில், சிட்ரஸுடன் தண்ணீர் வினைபுரிந்து செரிமான பிரச்சனை உண்டாக்கும்.
Read More
ஸ்ட்ராபெர்ரி பழம்

 சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஸ்ட்ராபெரியை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடித்தால் இரைப்பை சாற்றை நீர்த்துப் போக செய்யும். இது செரிமானத்திற்கு தேவையான நொதியை பாதித்து செரிமான பிரச்சனையை தூண்டும்.
பப்பாளி பழம்

அல்சர் பிரச்சனைக்கு பப்பாளி பழம் சாப்பிடுவது நல்லது. இருப்பினும், பப்பாளியை சாப்பிட்டவும் தண்ணீர் குடிப்பது, அமிலத்தன்மையை அதிகரிக்க செய்து அல்சர் பிரச்சனையை தீவிரமாக்கும். அல்சர் நோயாளிகளே உஷார்..
Read More
வெள்ளரி

 வெள்ளரியை சரியான முறையிலும், சரியான அளவிலும் எடுத்துக்கொண்டால் நம் செரிமான அமைப்பு மேம்படும். அதுவே, வெள்ளரியை சாப்பிட்டதும் தண்ணீர் பருகினால் குடல் இயக்கங்கள் பாதிப்படையும். வயிறு எரிச்சலும் உண்டாகும்.