Tap to Read ➤

White Skin Tips Tamil | Men's Natural Beauty Tips In Tamil

Beauty Tips For Men In Tamil Language : ஆண்களே! உங்கள் அக்குள் பகுதியில் ஏற்படும் கருமையை தடுக்க இதை செய்யுங்கள்
அழகு மற்றும் சரும பராமரிப்பு என்பது பெண்களுக்கு மட்டும் அல்ல.சரும பராமரிப்பில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
ஆண்களும் இப்போது சரும பராமரிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்கள். ஆண்களே உங்கள் அக்குள் கருமையாகவும் துர்நாற்றம் வீச கூடியதாகவும் இருக்கிறதா?
டியோடரண்டுகள் உபயோகித்தல், ஷேவிங் செய்யும் போது ஏற்படும் சிராய்ப்பு, இறந்த சரும செல்கள் அக்குள்களில் குவிதல் போன்ற காரணங்களால் இவை ஏற்படுகின்றன.
அக்குள் கருமையடைதல் என்பது பலருக்கும் உள்ள கவலை.இதில்
அக்குள் கருமையடைதலை போக்கும் சில எளிய குறிப்புகள் பற்றி பார்க்கலாம்.
உணவில் புரோட்டீன்கள்,விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து இருக்க வேண்டும். இதற்கு
பழங்கள் காய்கறிகள், கீரைகள் மற்றும் முழு தானியங்கள் அதிகம் சேர்த்து கொள்ளப்பட வேண்டும்.
இவற்றில் உள்ள சத்துக்கள் அக்குள் பகுதி கருமை அடைவதை தடுக்கிறது.
முடியை நீக்கும் கிரீம்கள் மற்றும் அக்குள்களுக்கு ஹாட் வாக்சிங் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இது தோலின் மெல்லிய அடுக்கை நீக்குகிறது. இதனால் தொற்று மற்றும் எரிச்சல் ஏற்படும் மேலும் அக்குள் கருமை அடையும். இதற்கு ஷேவிங் அல்லது லேசர் முடி குறைப்பு முறையை பின்பற்றலாம்.
அனைவருக்கும் அக்குள் துர்நாற்றம் என்பது மிக பெரிய கவலையாக இருக்கும். இதற்காக டியோடரண்டுகள் வாங்குகிறோம். பாராபென்ஸ், ட்ரைக்ளோசன் போன்றவை டியோடரண்டுகளில் உள்ளன.இவை அக்குள்களில் கருமையை ஏற்படுத்தும். இதற்கு நச்சுக்கள் இல்லாத இயற்கையான ரோல் ஆன் டியோடரண்டுகளை பயன்படுத்தலாம்.
கிளைகோலிக் அமிலம் அக்குள் கருமை அடைவதை தடுப்பதில் வல்லது.இது வியர்வையை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை நீக்கி துர்நாற்றத்தை அகற்றுகிறது. இதனை அக்குள்களை சுத்தம் செய்த பிறகு பயன்படுத்தலாம். அப்போது அரிப்பு அல்லது கொப்புளங்கள் ஏற்பட்டால் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
அக்குள் உள்ளே இருப்பதால் தோலின் மடிப்பு காரணமாக காற்றோட்டம் இல்லாமல் ஈரப்பதமாக இருக்கும். இதனால் இப்பகுதியில் பாக்டீரியா வளரும். இதை நீக்க ஷேவிங் செய்வது இறந்த செல்களை அகற்ற உதவும். இதற்கு டெய்சி ஃப்ளவர் போன்ற இயற்கை சாறுகளை பயன்படுத்தலாம்.