Tap to Read ➤

காலையில் வெறும் வயிற்றில் வெல்லம் கலந்த தண்ணீரை குடிப்பதன் பயன்

வெல்லத்தை சாப்பிட குளிர் காலம் சிறந்த பருவங்களில் ஒன்றாகும். ஏனெனில் இது நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தி உடலை சூடாக வைத்திருக்க உதவுகிறது.
குளிர் காலத்தில் வெல்லத்தின் தண்ணீரை ஏன் குடிக்க வேண்டும் என்பது பற்றி இதில் தெரிந்து கொள்ளலாம்.
வெல்லத்தின் நன்மைகள்
வெல்லம் சூடான ஆற்றலைக் கொண்டிருப்பதால்,இது உடலுக்கு வெப்பத்தை அளிக்கிறது
 இரத்தத்தை சுத்திகரிக்க உதவும் இரும்பு மற்றும் ஃபோலேட் போன்றவை நிறைந்துள்ளதால்.
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது மேலும் மூளைக்கு ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிக்கிறது
சுவாசக்குழாய், நுரையீரல், வயிறு மற்றும் உணவுக் குழாய் ஆகியவற்றைச் சுத்தப்படுத்த உதவுகிறது.
வெல்லம் தண்ணீர்
வெல்லம் தண்ணீர் ஒரு இயற்கை நச்சு நீர். இதில் தண்ணீரில் கலந்த வெல்லத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. இந்த தண்ணீரை குடிப்பது காலை வேளையில் ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும்.
வெல்லம் தண்ணீரை செய்வது எப்படி ?
ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். அதில் சிறிய அளவிலான துண்டு வெல்லத்தைச் சேர்த்து, வெல்லம் உருகும் வரை கிளற வேண்டும். பின்பு, வெது வெதுப்பாக ஆனதும், காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
வெல்லம் கலந்த தண்ணீரை ஏன் குடிக்க வேண்டும் ?
வெல்லத்தில் பொட்டாசியம் மற்றும் சோடியம் நிறைந்திருப்பதால் எலும்புகளை வலுவாக்கும்
 மூட்டு வலிகளைப் போக்கும். எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
 வெல்லம் தண்ணீர் கீல்வாத வலியை குணப்படுத்தும்
 வெல்லம் தண்ணீர் இயற்கை நச்சுப் பானமாக செயல்படுகிறது
 சருமத்திற்கு இயற்கையான பளபளப்பைக் கிடைக்க செய்கிறது