Tap to Read ➤

வெங்காயதோலில் இருக்கும் நன்மைகள்

Onion Peel Benefits
வெங்காயம் எல்லோர் வீட்டு சமையல் அறையிலும் இருக்கும் ஒரு காய். இது பல வகையான உணவு வகைகளை சமைக்க பயன்படுத்தப்படுகிறது. இது உணவின் சுவையை கூட்டுகிறது.
வெங்காயத்தின் விலை உயர்ந்தால் அது நாட்டில் மிக பெரிய பிரச்சனையை உருவாக்கி விடும். அந்த அளவுக்கு வெங்காயம் சமையலில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
வெங்காயத்தை உரித்த பிறகு, அதன் தோல் தேவை அற்றது என்று நினைத்து குப்பையில் வீசுகிறோம். ஆனால் அதன் நன்மைகள் பற்றி நீங்கள் அறிந்தால், ஒருபோதும் அப்படி செய்ய மாட்டீர்கள்.
வெங்காய தோலின் நன்மை, மகத்துவம் என்ன மற்றும் அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றி இதில் பார்க்கலாம்.
வெங்காய தோலில் விட்டமின் ஏ அதிகமாக உள்ளது. இது கண் பார்வையை அதிகரிக்க செய்து மாலைக்கண் நோயை தடுக்கிறது. இதற்கு வெங்காய தோலில் தேநீர் தயாரித்து குடிக்க வேண்டும்.
வெங்காய தோலில் விட்டமின் சி உள்ளது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது வைரஸ் தொற்று அபாயத்தை குறைப்பதால், சளி - இருமல் போன்ற பிரச்சனைகள் வராது.
கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வெங்காய தோல் பயன்படுகிறது. வெங்காய தோலை தண்ணீரில் போட்டு ஒரு மணி நேரம் கழித்து அந்த நீரில் தலையை அலச வேண்டும். இதன் மூலம் கூந்தல் உதிர்தல் பிரச்சனை நீங்கும்.
வெங்காய தோலை கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு வெந்நீரில் கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின் அதை வடிகட்டி அந்த நீரை குடிக்க வேண்டும் . இதனால் இதய நோய் வரும் வாய்ப்பு குறையும்.
வெங்காய தோலை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரில் கொப்பளிக்க வேண்டும். அல்லது தேநீரில் கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். இது தொண்டை புண் மற்றும் பிற பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.