Tap to Read ➤

Best Lip Care In Winter | Dry Lips Care In Winter

Lip Care In Winter At Home: குளிர் காலத்தில் ஏற்படும் உதடு வெடிப்பை தடுக்க உதவும் வழிகள்
குளிர் காலத்தில் சருமம் வறட்சியாக இருக்கும். குறிப்பாக உதடுகள் வறண்டு தோல் உரியும் நிலை ஏற்படும். இதற்கு குளிர்ந்த வானிலை மற்றும் குளிர்ந்த காற்று போன்றவை காரணமாக இருக்கின்றன.
உதடு வெடிப்பை கவனிக்காமல் விட்டு விட்டால்,நாளடைவில் தோல் உரிந்து ரத்தம் வெளியேற ஆரம்பித்து விடும். இதனால் குளிர் காலத்தில் உதடுகளை ஈரப்பதமாக, ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்.
குளிர் காலத்தில் உண்டாகும் உதடு வெடிப்பை தடுக்க இதை பின்பற்றினால் போதும். உதடு வெடிப்பை தடுக்கும் எளிய டிப்ஸ்கள் குறித்து இதில் பார்க்கலாம்.
குளிர் காலத்தில் உதடுகள் எளிதில் உலர்ந்து விடுவதால் உதடுகளில் எச்சில் வைப்பது அனைவரும் செய்யும் ஒரு இயல்பான விஷயம். உதடுகளில் அதிகப்படியாக உமிழ்நீரை வைப்பதால் உதடு வெடிப்பு ஏற்படும்.
உதடு வெடிப்பு நீங்க லிப் பாம் பயன்படுத்துவது நல்லது. இரவு தூங்கும் முன் லிப் பாமை உதட்டில் தடவி கொண்டு தூங்க வேண்டும். பயன்படுத்த கூடிய லிப் பாமில் "பாரபென்" மற்றும் "ஆல்கஹால்" இருக்க கூடாது.
உடலில் போதுமான அளவு நீரேற்றம் இருந்தால் உதடு வெடிப்பு ஏற்படாது. குளிர் காலத்தில் தாகம் அதிகமாக ஏற்படாது. அதனால் ஒரு நாளைக்கு தேவையான போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
தேன் 1 ஸ்பூன், சர்க்கரை 2 ஸ்பூன் விகிதத்தில் கலந்து உதடுகளில் 5 முதல் 10 நிமிடங்கள் வரை மெதுவாக தேய்க்க வேண்டும். பின் வெது வெதுப்பான நீரில் கழுவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எலுமிச்சை சாறு, பாதாம் எண்ணெயை எடுத்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இக்கலவையை உதட்டில் தடவி உலர்ந்த பின்னர் கழுவ வேண்டும். இது உதட்டுக்கு ஈரப்பதத்தை அளிக்கிறது.
பால் பொருட்கள் உதடுகளுக்கு இயற்கையான பொலிவை வழங்குகின்றன. பாலாடை, நெய், போன்றவற்றில் ஏதாவது ஒன்றை உதடுகளில் தடவி வந்தால் உதடு வறட்சி, வெடிப்பு போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள் நிறைந்த சீரான உணவை உட்கொள்வது அவசியம். நீர்ச்சத்து அதிகமுள்ள பழங்கள், காய்கறிகளை எடுத்து கொள்ள வேண்டும். ஆரோக்கியமாக இருந்தாலே உதடு வெடிப்பு ஏற்படாது.