முகமது அசீம் ஒரு மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கி இன்று பிரபல சின்னத்திரை நடிகராக வலம் வருபவர். கடைக்குட்டி சிங்கம், மாயா, பகல் நிலவு, பிரியமானவள், தெய்வம் தந்த வீடு போன்றவை அசீமின் மனம் கவர்ந்த சீரியல்களாகும்.
சீரியல் நடிகர் மட்டுமல்லாமல், விஜே (VJ), நிகழ்ச்சி தொகுப்பாளராகும் பணியாற்றி இருக்கிறார். முகமது அசீமின் அம்மா பெயர் ஜன்னத். அசீமுக்கு முகமது ஆதில் என்ற தம்பியும் இருக்கிறார்.
அசீம் சையத் சோயா என்பவரை காதலித்து2018 ஆம் ஆண்டு சென்னையில் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ரயான் கரீம் என்ற மகனும் இருக்கிறார்.
அசீமும் ஷிவானியும் பகல் நிலவு சீரியலில் இணைந்து நடித்த போது இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக வதந்தி பரவியது. அதனால் அசீம் மற்றும் அவரது மனைவிக்கும் நடுவே பிரச்சனை வெடித்தது.
இதனால் 2021 ல் அசீம் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். ஆனால், மனைவியை விவாகரத்து செய்ததற்க்கு முக்கிய காரணம் ஷிவானியுடனான காதல் தான் என்று சர்ச்சை எழுந்தது.
இருவரும் காதலிப்பதாக பேச்சிகள் கிளம்பியது. உண்மையில் அசீமிற்கும் சிவானிக்கும் தொழில் ரீதியான தொடர்பை தவிர வேறு எந்த தொடர்பும் கிடையாது என்று அவரே ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
ஸ்டார் விஜய்யில் ஷிவானி நாராயணனுடன் ஜோடி நம்பர் ஒன்: ஃபன் அன்லிமிடெட் என்ற நடன ரியாலிட்டி ஷோவின் சீசன் 10 இல் அசீம் பங்கேற்றிருந்தார்.
ஜெயா டிவி, தந்தி டிவி, சன் மியூசிக் டிவி, விஜய் டிவி என பல்வேறு சேனல்களில் பணியாற்றியுள்ளார். 2022 இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 6 தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக தோன்றியிருக்கிறார். வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.