Tap to Read ➤

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் அந்த ரெண்டு போட்டியாளர்..

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி 59 வது நாட்களில் ஒளிபரப்பாகி வருகிறது. விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த ரியால்டி ஷோவில் ஒவ்வொரு சீசனிலும் சுமார் 50 நாட்களுக்கு மேல் புதியதாக வைல்ட் கார்டு என்ட்ரி அறிமுகம் ஆவார்.
தற்போது, 58 நாட்களை கடந்த வகையில் எப்போது வைல்ட் கார்டு வருவார் என்று ரசிகர்களும் போட்டியாளர்களும் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.
21 போட்டியாளர்களுடன் ஆரம்பமான இந்த சீசனில் தற்போது 21 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்தநிலையில், இந்த வாரம் 2 போட்டியாளர்கள் வெளியேறுவார்கள் என்று கமல் கடந்த வாரமே கூறியிருந்தார்.
அதன்படி, ஜனனி, கதிரவன், அசீம், ஆயிஷா, ஏடிகே, ராம் ஆகியோர் நாமினேஷன் லிஸ்டில் இருக்கிறார்கள். மேலும், வாக்குகளின் அடிப்படையில் ஆயிஷா, ராம், ஏடிகே டேஞ்சர் நிலையில் உள்ளனர்.
இவர்களில் ராம் கடைசி இடத்தில் இருப்பதால் ராம் இந்த வாரம் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவருடன் அசீமும் வெளியேற்றவுள்ளதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு வாரமும் போட்டியில் அதிகமாக விறுவிறுப்பாக இருக்கிறதோ இல்லையோ சண்டை சச்சரவுக்கு அளவே இல்லாமல் இருந்துவருகிறது. அதில் முதல் ஆளாக இருந்து வருகிறார் அசீம்.
என்னதான் இருந்தாலும் நேர்மையான தன்மையால், இவருக்கு ரசிகர்களின் ஆதரவு பெருகி வருகிறது. இதனால், சில வாரங்களுக்கு முன்பு முதலிடத்தில் சேவ் ஆன இவரை, கடைசி நேரத்தில் தான் சேவ் என்று கூறினார் கமல்.
அதேபோல், இந்த வாரத்தில் முதலிடத்தில் சேவ் ஆகியிருக்கும் அசீம் வெளியேற்றப்பட்டு மீண்டும் வீட்டிற்கு வரும்போது போட்டியாளர்களின் நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.