Tap to Read ➤

பாலிவுட் ஆக்டர் சல்மான் கான் என்னும் அப்துல் ரஷித் சலீம் சல்மான் கான்

27 டிசம்பர் 1965 லில் பிறந்த சல்மான் கான் பற்றிய சம் இன்ட்ரெஸ்டிங் பேக்ட் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க
சல்மான் கானுக்கு trigeminal neuralgia முக நரம்பியல் பிரச்சனை இருக்கிறது. இதை ”suicide disease” என்றும் குறிப்பிடுகிறார்கள்.
சோப்பு மீது அதிக பிரியம் கொண்டவராம் சல்மான் கான். இவரது வீட்டிலும், குளியல் அறையிலும் நிறைய சோப்புகள் இருக்குமாம். இவருக்கு காய்கறி, பழங்களின் சாறுகளில் இருந்து உருவாக்கப்பட்ட இயக்கையான சோப்புகள் தான் பிடிக்குமாம்.
சல்மான் கான் மெயில் பயன்படுத்துவது இல்லை. யாராக இருந்தாலும் அலைப் பேசியில் பேச தான் பிடிக்குமாம்.
ஜெய் ஹோ படத்தின் போஸ்டர்கள் சல்மான் கான் வரைந்ததாக கூறப்படுகிறது. அமீர் கான் வீட்டில் சல்மான் கானின் சில ஓவியங்கள் இருப்பதாகவும் அறியப்படுகிறது.
எந்த ஒரு சினிமா விமர்சனத்தையும் படிக்க சல்மான் கானுக்கு பிடிக்காதாம்
அறிமுக படம் மெயின் பியார் கியா, படத்திற்கு பிறகு 6 மாத காலம் வேலை இல்லாமல் சும்மா தான் இருந்து இருக்கிறார் சல்மான் கான்.
சல்மான் கானை செல்லமாக Launch Pad என்று அழைப்பதுண்டு. இதற்கு காரணம் இவர் மூலமாக இந்தியில் நிறைய நடிகைகள் அறிமுகமாகி உள்ளனர். நக்மா, பூமிகா சாவ்லா, சினேகா உல்லல், கத்ரீனா கைப், ஜரின் கான் மற்றும் பலர் சல்மான் கானால் அறிமுகமானவர்கள் தான்.
சல்மான் கானை பார்த்து தான் ஹ்ரித்திக் ரோஷன் - அர்ஜுன் கபூர் போன்ற நடிகர்கள் உடற்கட்டை(பாடி பில்டிங்) மேம்படுத்த தொடங்கினார்களாம்.
மும்பையில் Bhaijaanz என்ற பெயரில் உணவகம் செயற்படுகிறதாம் . இது முழுக்க, முழுக்க சல்மான் கான் ரசிகர்களுக்கான உணவகமாம்.
சல்மான் கானுக்கு திரையில் நடிகைகளுடன் முத்தக் காட்சிகளில் நடிப்பது பிடிக்காதாம். ஜீத் எனும் படத்தில் மட்டும் கரிஷ்மா உடன் ஒரே ஒரு காட்சியில் கொஞ்சம் நெருக்கமாக நடித்து இருந்தார்.
பள்ளிப் பருவத்தில் நீச்சலில் சிறந்து விளங்கினாராம் சல்மான் கான். தேசிய அளவிலும் நீச்சலில் பங்கெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததாம்.
விலை உயர்ந்த பரிசுகள் கொடுப்பது சல்மானுக்கு பிடித்த விஷயம். கரீனா கபூருக்கு BMW கார், கத்ரீனா கைப்க்கு 4 BHK வீடு என பரிசுகள் வாங்கி கொடுத்துள்ளார்.