Tap to Read ➤

குளிர் காலத்தில் முகத்தில் கடலை மாவு பயன்படுத்த கூடாது - ஏன் தெரியுமா?

கடலை மாவு சரும ஆரோக்கியத்திற்கு பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய பொருள். கடலை மாவு ஒரு எக்ஸ்ஃபோலியண்டாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், நீண்ட காலமாக அழகுக்கான பிரதான பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கடலை மாவு நிறமி, கரும்புள்ளிகள், வடுக்கள் ஆகியவற்றை ஒரே நேரத்தில் எதிர்த்துப் போராட உதவுகிறது. பல தோல் பிரச்சனைகளைச் சமாளிக்க உதவுகிறது.
அடிக்கடி கடலை மாவை பயன்படுத்துவது சருமத்தை உலர்த்தும். அதிகப்படியான கடலை மாவை பயன்படுத்துவது ஒரு மோசமான செயலாகும். ஏனெனில் இது சருமத்தில் அதிக வறட்சியை ஏற்படுத்தும்.
சரியான முறையில் கடலை மாவை பயன்படுத்தினால், அது டேனை நீக்கி, சருமத்தை பிரகாசிக்க வைக்கும். குளிர்காலத்தில் கடலை மாவை பயன்படுத்தும் சரியான முறையை தெரிந்து கொள்ள வேண்டும்.
குளிர்காலத்தில் கடலை மாவு ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்தினால், அதை நிமிடங்களுக்குள் அகற்றி விட வேண்டும். நீண்ட நேரம் வைத்திருப்பது வறட்சியை ஏற்படுத்தும். குளிர்காலத்திற்கு ஏற்ற கடலை மாவு ஃபேஸ் பேக்குகளை இதில் பார்க்கலாம்.
ஒன்றரை தேக்கரண்டி தேன் மற்றும் இரண்டு தேக்கரண்டி கடலை மாவை எடுத்து கொள்ள வேண்டும். இரண்டையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இது உலர் சருமத்திற்கு உகந்த ஃபேஸ் பேக். இதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து, வெது வெதுப்பான நீரில் கழுவ வேண்டும். .
2 தேக்கரண்டி தயிருடன் 2 தேக்கரண்டி கடலை மாவை கலந்து பேஸ்ட் செய்ய வேண்டும். இதை முகத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு ஒரு 10 நிமிடங்கள் அப்படியே விட்டு விட வேண்டும். இப்போது, இதை தேய்த்து, முகத்தில் இருந்து அகற்றி, வெது வெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி கடலை மாவு, 1 தேக்கரண்டி பாதாம் எண்ணெய் மற்றும் முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து கலக்க வேண்டும். கலவை மிகவும் தடிமனாக இருந்தால், தேன் அல்லது தயிரை சேர்த்து கொள்ளலாம். இதை முகத்தில் தடவி 10-15 நிமிடங்கள் கழித்து வெது வெதுப்பான கழுவ வேண்டும்.