Chocolate Day History In Tamil | Chocolate Day History
Valentine's Day And Chocolate History : காதலர் தினத்தன்று சாக்லேட்டை கொடுத்து ஏன் காதலை கூறுகிறார்கள் ?
காதலர்களுக்கு தினமும் காதலர் தினம் தான். ஆனால் உலகம் முழுக்க பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது ஒரு வாரம் காதலர்களுக்காகவே சிறப்பாக கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்தின் மூன்றாவது நாளான சாக்லேட் டே 9 பிப்ரவரி அன்று கொண்டாடப்பட இருக்கிறது.
சாக்லேட் தினத்தில் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு பிடித்த சாக்லேடை வாங்கி கொடுக்க வேண்டும் என்று பலரும் நினைக்கின்றனர். அப்படி வாங்கி கொடுக்கும் போது வெறும் சாக்லேட் மட்டுமல்ல, அன்பான வார்த்தைகளை கூறுவது அதை விட முக்கியம்.
சாக்லேட் காதலர்களின் உறவுக்கு பாலமாக இருக்கிறதாம். இதனால் காதலர்கள் சாக்லேட்டை தங்களுக்குள் பரிமாறி கொள்வார்கள். சாக்லேடை தவிர சாக்லேட் உணவுகள், சாக்லேட்டால் ஆன பரிசுகளை கூட காதலருக்கு பரிசாக கொடுக்கலாம்.
19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் குடும்பத்தை சேர்ந்த " ரிச்சர்ட் காட்பரி" என்பவர் கோகோ வெண்ணெயை பயன்படுத்தி முதன்முதலில் சாக்லேட்டுகளை தயாரித்தார். தயாரித்த சாக்லேட்டுகளை ரிச்சர்ட் கேட்பரி இதய வடிவிலான பெட்டிகளில் அடுக்கி, விற்க ஆரம்பித்தார்.
தயாரித்த சாக்லேட்டுகளை காதலர் தினத்தையொட்டி கொடுக்கும் பழக்கம் அதன் பின் தொடர்ந்ததாக வரலாறு கூறுகிறது. இதன் விற்பனை மொரோசாஃப் என்ற சாக்லேட் விற்பனையாளரால் வணிக ரீதியாக தொடங்கப்பட்டு உள்ளது.
காதலர் வாரத்தின் மொத்த சுவையும் இந்த தினத்தில் தான் உண்டு என உணர்கிறார்கள் காதலர்கள். சாக்லேட்டை போல காதலும் இனிப்பை கொடுக்கும் என்பதால் சாக்லேட் தினம் கொண்டாடப்படுகிறது.
உலகம் முழுவதுமே சாக்லேட் அன்பின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஒருவருக்கு ஒருவர் சாக்லேட் கொடுத்து வாழ்த்து தெரிவித்து கொள்வதால் காதலர்களுக்குள் காதல் அதிகமாகும்.
சாக்லேட் கொடுப்பதால் யாரை வேண்டுமானாலும் மகிழ்ச்சியில் ஆழ்த்த முடியும். இதற்கு வயதோ, பாலினமோ பாகுபாடில்லை.புன்னகையுடன் சாக்லேட் கொடுத்து கனிவாக இருங்கள். அந்த கனிவுதான் அனைவருக்கும் தேவைப்படுகிறது