கிறிஸ்துமஸ் தினத்தில் வீட்டை அழகாக்கும் 10 வகையான கிறிஸ்துமஸ் மரங்கள்
இதில் என்னென்ன வகைகள் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க
ஃப்ரேசர் ஃபிர்
இது கவர்ச்சிகரமான வாசனையை கொண்டுள்ளது. இது ஆபரணங்களை தொங்க விட சிறந்தது.
டக்ளஸ் ஃபிர்
இது பிஸு டாட்சுக மேன்ஜிஸீ என்றும் அழைக்கப்படுகிறது. வட அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட இந்த பைன் மரம் மிகவும் பிரபலமான கிறிஸ்துமஸ் மரம்
ஈஸ்டர்ன் ஒயிட் பைன்
இது பினஸ் ஸ்ட்ரோபஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது வட அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெரிய பைன் மரம் ஆகும்.
நார்டிக் ஸ்ப்ரூஸ்
தளிர்களையும் மிகப் பெரிய கூம்புகளையும் கொண்ட நார்டிக் ஸ்ப்ரூஸ், வடக்கு கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவை பூர்விகமாக கொண்டதாகும்.
நோபிள் ஃபிர்
இது அபீஸ் ப்ரோசெரா அல்லது ரெட் ஃபிர் என்றும் அழைக்கப்படுகிறது. இது கலிபோர்னியா, ஓரிகான் மற்றும் வாஷிங்டனில் பகுதிகளில் கிடைக்கிறது.
கொலராடோ ப்ளூ ஸ்ப்ருஸ்
இது க்ரீன் மற்றும் ஒயிட் ஸ்ப்ருஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது வயோமிங், உட்டா, இடாஹோ, அரிசோனா, கொலராடோ மற்றும் நியூ மெக்ஸிகோ போன்ற இடங்களில் கிடைக்கிறது.
பால்சம் ஃபிர்
இது அபீஸ் பல்சமியா என்றும் அழைக்கப்படுகிறது. இது கிழக்கு மற்றும் மத்திய கனடா மற்றும் வட கிழக்கு ஐக்கிய மாகாணங்களில் கிடைக்கிறது.
ஒயிட் ஃபிர்
இது பினேசியே குடும்பத்தை சேர்ந்த மரம் ஆகும் . இது ஓரிகான், கலிபோர்னியா, இடாஹோ, வயோமிங், உட்டா, கொலராடோ, அரிசோனா, நியூ மெக்ஸிகோ மற்றும் மெக்சிகோவில் கிடைக்கிறது.
கேனான் ஃபிர்
இது வெஸ்ட் விர்ஜீனியா பால்சம் ஃபிர் என்றும் அழைக்கப்படுகிறது. இது வெஸ்ட் விர்ஜீனியா மலைகளில் கிடைக்கிறது. இது 50 அடி உயரம் வரை வளர கூடியது.
லேலண்ட் சைப்ரஸ்
கிறிஸ்துமஸ் மரங்களினால், ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்படுபவர்களுக்கு இந்த மரம் சிறந்த தேர்வாகும். ஏனெனில், இது ஒவ்வாமையை ஏற்படுத்தாது.