Tap to Read ➤

குளிர் காலத்தில் பொடுகு தொல்லையால் அவதியா, இத பண்ணுங்க போதும்

தலையில் உள்ள சருமத்தின் செல்கள் இறக்கும் போது ,அந்த இறந்த செல்கள் உதிர்வதே பொடுகு ஆகும்
பொடுகு வறண்ட தலை அல்லது கிருமி பாதிப்பால் ஏற்படுகிறது. எக்ஸிமா, சோரியாஸிஸ் போன்றவையும் காரணமாக இருக்கலாம்.
பொடுகு வர காரணம்
ஹார்மோன் ஏற்றத் தாழ்வு
நோய் எதிர்ப்புத் தன்மை குறைதல்
 அதீத மன உளைச்சல்
 தட்ப வெப்ப நிலை மாறுபாடு
முகப்பரு மற்றும் எண்ணெய் பசை
தலையைச் சுத்தமில்லாமல் வைத்துக் கொள்வது
 அதிக உடல் பருமன்
பொடுகு பிரச்சனையை தீர்க்க பின்வரும் வழி முறைகளை பின் பற்றுங்கள்
டீ இலை
பொடுகு காரணமாக அரிப்பு ஏற்பட்டு, தலையில் எரிச்சல் ஏற்படுவது சாதாரணம் ஆகி விட்டது . இதற்கு டீ இலைகளை 6 கப் தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை வடிகட்டி குளிர்விக்க வேண்டும். பின்பு அதில் எலுமிச்சை சாறு சேர்த்து பயன்படுத்தினால் விரைவிலேயே பொடுகு தொல்லை நீங்கி விடும்.
கற்பூரம் மற்றும் தேங்காய் எண்ணெய்
கற்பூரத்தையும் சிறிதளவு தேங்காய் எண்ணெயும் எடுத்து கொண்டு அவற்றை ஒன்றாக கலந்து, காற்று புகாத பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை தூங்க போவதற்கு முன் தினசரி தலையில் தேய்த்து வர வேண்டும். இதனால் பொடுகு தொல்லை நீங்கும்.
கற்றாழை ஜெல்
சிறிது கற்றாழை ஜெல்லை எடுத்து கொண்டு உச்சந்தலை முழுவதும் மசாஜ் செய்ய வேண்டும். தலையில் கற்றாழை ஜெல் முழுவதுமாக படும்படி மசாஜ் செய்ய வேண்டும். பின்பு ஒரு மணி நேரம் கழித்து தலையை அலசி விட வேண்டும். வாரத்தில் குறைந்தது இரண்டு முறையாவது இந்த ஜெல்லை பயன்படுத்த வேண்டும்.
வெங்காயச் சாறு
சிறிதளவு வெங்காயத்தை எடுத்து அதை அரைத்து, அதன் சாறைப் பிழிந்து வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும். இதை அப்படியே தலையில் தடவி, ஒரு மணி நேரம் விட்டு பிறகு அலசி விட வேண்டும். வாரத்தில் குறைந்தது இரண்டு முறையாவது இந்த சாறைப் பயன்படுத்த வேண்டும்.