Tap to Read ➤

Dhruva Natchathiram Release | Dhruva Natchathiram Release Date 2023

Vikram Latest Movie Tamil: டிவிட்டரில் ட்ரெண்டாகி வரும் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம்
சீயான் விக்ரம் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. இவர் நடித்த பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
கடந்தாண்டு வெளியான மூன்று படங்களில், பொன்னியின் செல்வன் முதல் பாகம் மட்டுமே அவருக்கு நல்ல கம்பேக் கொடுத்தது. மகான் மற்றும் கோப்ரா திரைப்படங்களுக்கு நெகட்டிவான விமர்சனங்களே கிடைத்தன.
தங்கலான் நடித்து முடித்த பின்னரே அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகும் என சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த துருவ நட்சத்திரம் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
துருவ நட்சத்திரம் படத்தின் போஸ்டரை 'ஜான் விரைவில் உங்களை சந்திப்பார்' ( John will meet you soon ) என்ற கேப்ஷனுடன் படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், அதில் ஃபைனல் ஸ்டேஜ்ஸ் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது .
விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, சிம்ரன், பார்த்திபன், ராதிகா சரத்குமார் மற்றும் அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஸ்பை திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் , விக்ரம் "ஜான்' என்ற கதாபாத்திரத்தில் ரகசிய உளவாளியாக நடித்துள்ளார். இப்படத்தின் அப்டேட் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் வெளிநாடுகளில் நடந்துள்ளது. இப்படத்தில் விக்ரம் அமெரிக்க ஸ்பையாக நடித்துள்ளதால் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு பஞ்சமே இருக்காது என ரசிகர்கள் அதிகம் எதிர் பார்க்கின்றனர்.
ஆனால், திடீரென இந்த படத்தின் ரிலீஸ் தாமதமாகிக் கொண்டே சென்றது. முக்கியமாக கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் வர இருக்க கூடிய இந்த படத்தை திரையரங்குகளில் பார்க்க ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.