Tap to Read ➤

குளிர் காலத்தில் குளிர்ந்த நீரை குடிப்பதால் ஏற்படும் விளைவுகள்

உயிர் வாழ்வதற்கான அடிப்படை தேவை தண்ணீர். ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது இன்றளவும் சந்தேகமாகவே உள்ளது. இருந்தாலும் , தாகம் எடுக்கும் போதெல்லாம் தண்ணீர் குடிப்பது நல்லது.
தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் தேவையான அளவு தண்ணீர் குடிப்பது, உடலின் அத்தியாவசியமான செயல்பாடுகளை செய்ய உதவி புரிகிறது. எனவே தினந்தோறும் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
சிலர் குளிர் காலத்தில் கூட குளிர்ந்த நீரைக் குடிப்பார்கள். இப்படி செய்யக் கூடாது.குளிர் காலத்தில் குளிர்ந்த நீரைக் குடிப்பதனால் உண்டாகும் தீமைகள் என்னென்ன என்பதை இதில் பார்க்கலாம்.
குளிர் காலத்தில், சளி மற்றும் தொண்டை புண் பிரச்சனைகள் அதிகமாக ஏற்படும். இந்த சூழலில் குளிர்ந்த நீரை குடித்தால், இந்தப் பிரச்சனைகள் இன்னும் அதிகரித்து விடும்.
குளிர் காலத்தில் குளிர்ந்த நீரை குடித்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறையாது. இதன் காரணமாக உடல் எடை அதிகரிக்கும்.
குளிர் காலத்தில் குளிர்ந்த நீரை குடிப்பதால் இரத்த நாளங்கள் சுருங்கி, செரிமானத்தில் பிரச்சனைகள் உண்டாகும். இது வயிற்றுப் பிரச்சனை ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
குளிர் காலத்தில் குளிர்ந்த நீரை குடிப்பது இதயத் துடிப்பைக் குறைத்து விடும். ஏனெனில் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும்போது , நரம்புகள் தூண்டப்படுவதால் , இதயத் துடிப்பு குறைந்து விடுகின்றன
குளிர் காலத்தில், குளிர்ந்த நீர் குடிப்பது பற்களை சேதப்படுத்தும். ஏனெனில் குளிர்ந்த நீர், பற்களின் நரம்புகளை வலுவிழக்கச் செய்து விடுகின்றன .