Tap to Read ➤

கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய பழம்..

நம்மில் பலருக்கும் வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த பழத்தை சாப்பிட்டுவிட வேண்டும் என்ற ஆசை மனதில் குடிக்கொண்டிருக்கும். அப்படி நம்மில் பலரும் சாப்பிட துடிக்கும் பழங்களில் இந்த டிராகன் பழமும் ஒன்று.
கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகையை ஏற்படுத்துமாம். கர்ப்ப காலத்தில் இரும்பு சத்து அதிகம் கொண்ட இந்த பழத்தை சாப்பிட்டால் இரத்த சோகையைத் தடுக்கவும்,  உடலின் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் முடியும்.
இந்த பழத்தில் இருக்கும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு உறுதியான எலும்பு உருவாக்கத்திற்கும், சிறந்த இரத்த ஓட்டத்திற்கும்,  மூளை ஆரோக்கியத்திற்கும் உதவிபுரிகின்றன.
உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு டிராகன் பழம் பெஸ்ட் சாய்ஸ், ஏனென்றால் இதில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. இது உங்களை நீண்ட நேரத்திற்கு முழுமையாக வைத்திருக்க உதவும், இதனால் அதிகமாக சாப்பிடுவதை குறைக்க இயலும்.
சர்க்கரை நோயாளிக்கு அன்றாடம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் போராட வேண்டியிருக்கும். அப்படிபட்டவர் இந்த டிராகன் பழத்தை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம்
டிராகன் பழம் நமது சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது. இந்த பழத்தை ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து அரைத்து மாஸ்க் மாதிரி முகத்தில் அப்ளை செய்வதன் மூலம் மென்மையான சருமத்தை பெற முடியும்.
ஃப்ரீ ரேடிக்கல்கள் சருமத்தை காயப்படுத்தாமலும் தடுக்கலாம். அதுமட்டுமல்லாமல், இது சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கவும் உதவுகிறது, இதனால் என்றும் இளமையான சருமத்தை கொண்டிருப்பீர்கள்.
இந்த பழம் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் ஏற்றது. பார்வை திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும், இது கல்லீரல் நோய் அபாயத்தையும் குறைக்கிறது.
இத்துனை நன்மைகளை வழங்கும் டிராகன் பழத்தை அளவோடு எடுத்துக்கொண்டால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அளவுக்கு மீறினால், வயிற்று போக்கு, வயிறு உப்பசம் போன்ற வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு வழிவக்கும்.