Tap to Read ➤

முருங்கைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

Drumstick Benefits
நாம் வழக்கமாக சமைக்கும் காய்களில் என்னற்ற சத்துக்கள் அடங்கி உள்ளன. அத்தகைய சத்துக்கள் நிறைந்த காய்களில் முருங்கையும் ஒன்று .
முருங்கைக்காய் மற்றும் முருங்கை இலை சாப்பிடுவதால் உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். அவை என்ன என்பது பற்றி இதில் பார்ப்போம்.
முருங்கையில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இதில் விட்டமின் சி, விட்டமின் ஈ, கால்சியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் உள்ளன. இவை பல நோய்களை குணப்படுத்த உதவுகின்றன.
முருங்கைக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும். முருங்கைக்காயை சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் இருக்கும்.
முருங்கைக்காய் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்காமல் இருக்க செய்கிறது.உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் முருங்கைக்காயை சாப்பிடுவது நல்லது .
முருங்கை இலையில் உயிர் சக்தி வாய்ந்த சேர்மங்கள் இருப்பதால், பிளேக் குவிவதைத் தடுக்கின்றது. முருங்கை சாப்பிடுவது இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும்.
முருங்கைக்காய் சருமத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதில் விட்டமின் ஏ, விட்டமின் பி மற்றும் ஃபோலிக் அமிலம் போன்ற சத்துக்கள் இருப்பதால் சருமத்திற்கு நன்மை பயக்கும்.
முருங்கைக்காய் தைராய்டு ஹார்மோனை கட்டுப்படுத்துகிறது மற்றும் தைராய்டு ஹார்மோன் அளவை குறைக்கிறது. இதனால் தைராய்டு உள்ளவர்கள் முருங்கைக்காயை சாப்பிடுவது நன்மை பயக்கும்
முருங்கையில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. முருங்கைக்காயை வாரத்தில் ஒரு முறை சாப்பிடுவதால் வலி மற்றும் வீக்கம் பிரச்சனை நீங்கும்.