Tap to Read ➤

மின் கட்டணத்தை பாதியாக குறைக்கும் சாதனம்

குளிர்காலம் முடிந்து கோடை காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். இனி வரும் நாட்களில் அதிகப்படியான மின் தடை பிரச்சனை ஏற்படும். கோடை காலம் என்றாலே மின்சாரத்தின் பயன்பாடு அதிகமாக இருக்கும்.
வெயில் காலத்தில் குழந்தைகள் இருக்கும் வீட்டில் நாள் முழுவதும் மின்விசிறிகள் மற்றும் ஏசி ஓடிக் கொண்டே இருக்கும். அப்போது மின் தடை ஏற்பட்டுவிட்டால் மிகப்பெரிய தொந்தரவுகளை சந்திக்க வேண்டி வரும்.
மின்தடை ஏற்பட்டுவிட்டால் எந்த வித சிக்கலும் இல்லாமல் இருக்க மார்க்கெட்டில் இன்வெர்ட்டர்கள், ஜெனரேட்டர்கள் மற்றும் பவர் ஸ்டேஷன்கள் நிறைய விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
அதிகப்படியான மின் கட்டணம் உங்களுக்கு ஒரு பிரச்சனையாக இருந்தால், அவற்றை பாதியாக குறைக்க ஒரு வழி இருக்கிறது. அந்த வகையில் அண்மையில் மார்க்கெட்டிற்கு வந்திருக்கும் சாதனம் EnjoyCool 1200 W 11-in-1 பவர் ஸ்டேஷன்.
EnjoyCool 1200 W 11-in-1 பவர் ஸ்டேஷன் சாதனத்தை வாங்கி பயன்படுத்தினால் மின் கட்டணம் பாதியாக குறைந்து விடும். இதன் விபரம் மற்றும் சிறப்பு அம்சங்களை இதில் பார்க்கலாம்.
EnjoyCool 1200 W 11-in-1 பவர் ஸ்டேஷன் அதிக திறன் கொண்ட 1008 Wh பேட்டரியைக் கொண்டுள்ளது.

 இது மிகவும் சிறியது என்பதால் எந்த இடத்திலும் பயன்படுத்திக் கொள்ள முடியும் ஒருமுறை சார்ஜ் செய்தால், நாள் முழுவதும் பொருட்களை இயக்கலாம்.

 இதன் மூலம் ஏசி, டிவி, லேப்டாப், ட்ரோன், புரொஜெக்டர் போன்றவற்றை இயக்க முடியும்.
இதில் இரண்டு 1200 W AC அவுட்லெட்டுகள், 120 W 12 V கார் சார்ஜர், 65 W USB-C, 18 W USB, இரண்டு 5 V USB-A போர்ட்கள் உள்ளன.

 EnjoyCool 1200W 11-in-1 பேட்டரி குறைவை காட்ட LED லைட் மற்றும் SOS சிக்னலையும் கொண்டு உள்ளது.

 அதிக வெப்பநிலை மற்றும் அதிக மின்னழுத்தத்தில் இருந்து பாதுகாக்க பேட்டரி மேலாண்மை அமைப்பு உள்ளது. இதன் எடை 11 கிலோ ஆகும்.
EnjoyCool 1200W 11-in-1 பவர் ஸ்டேஷன் ஆரம்ப விலை ரூ.56,120 உள்ளது.

 இது அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டு மார்ச் மாதத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.

 மின் கட்டணத்தைச் சேமிக்க விரும்பினால், வீட்டிலேயேயும் மற்றும் வெளியிலும் சார்ஜ் செய்து பயன்படுத்தலாம்.