கண் பார்வை பிரச்சனை தீர - ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவு பொருள்கள்
Eye Health Foods
கொரோனா காலகட்டம் பற்றி எல்லோரும் நன்றாக அறிவோம். கொரோனா பெருந்தொற்று பலரையும் வீட்டிலேயே முடக்கிவிட்டது. வீட்டில் இருந்தே
வேலை, மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் என செல்போன், கணினி, லேப்டாப் போன்ற சாதனங்களை பார்க்கும் நேரம் அதிகமாகிவிட்டது.
கொரோனா காலகட்டம் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்கிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். இதன் மூலம் சில நன்மைகள் இருந்தாலும்,
இது கண்களில் ஒரு தீவிர பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் கண் பார்வையை மேம்படுத்த உடற்பயிற்சி செய்வது, செல்போன், கணினி, லேப்டாப் போன்றவற்றின் திரையைப் பார்க்கும் போது
கண்ணாடி அணிவது மற்றும் கண்களை பரிசோதனைகள் செய்வது அவசியம் ஆகும்.
சரியான உணவு மற்றும் பானங்களை எடுத்து கொள்வதன் மூலம் கண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். ஆயுர்வேத நிபுணர்கள் கண் பராமரிப்புக்காக
சில உணவுகளை உணவில் சேர்த்து கொள்ள பரிந்துரைக்கின்றனர்.அவை என்னவென்று இதில் பார்க்கலாம்.
நெல்லிக்காயில் விட்டமின் சி நிறைந்து உள்ளது. விழித்திரை செல்களை பராமரிக்க மற்றும் ஆரோக்கியமான நுண்குழாய்களை மேம்படுத்த விட்டமின் சி முக்கிய பங்கு வகிக்கிறது.
கண்கள் ஆரோக்கியமாக இருக்க மற்றும் கண் பார்வையின் வெளிச்சம் அதிகரிக்க தினமும் கொஞ்சம் தேனை எடுத்து கொள்ள வேண்டும். தேன் கண் பார்வையை மேம்படுத்துகிறது.
பாதாமில் விட்டமின் ஈ உள்ளது. விட்டமின் ஈ கண்களுக்கு நன்மை பயக்கும் மற்றும் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். பாதாம் மாகுலர் சிதைவை மெதுவாக்க உதவுகிறது.
திரிபலா பொடியை எடுத்து கொண்டு அதனுடன் நெய் மற்றும் தேனை சம அளவில் கலந்து இரவில் உட்கொள்வது கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
குங்கும பூவை 2 முதல் 3 நாட்கள் இடை வெளியில் உட்கொள்ளலாம். இதில் இரும்புச்சத்து நிறைந்து உள்ளது. இது கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
கல் உப்பு, தூள் உப்பு இரண்டில் கண்களுக்கு எந்த உப்பு நல்லது என்றால் அது கல் உப்பு மட்டுமே. கல் உப்பை சமையலில் அதிகம் பயன்படுத்துவதால் கண் பார்வை மேம்படும்.
மஞ்சள் கண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் குர்குமின் உள்ளது. மஞ்சளை எடுத்து கொள்வதன் மூலம் கண் வறட்சி பிரச்சனை வராமல் தடுக்கலாம்.