Tap to Read ➤

கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய் போன்றவை வராமல் தடுக்க என்ன சாப்பிட வேண்டும்

நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பதில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. அது உங்களை ஆரோக்கியமாக்கவும் நோயை எதிர்த்து போராடவும் உங்களுக்கு உதவுகிறது.
எண்ணெய் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள், நொறுக்குத் தீனிகள், இனிப்புகள் போன்ற அனைத்தும் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
நீங்கள் உட்கொள்ளும் உணவு வகையும் உங்கள் வயதைப் பொறுத்து மாறும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
நமக்கு வயதாகும்போது நமது உடலின் ஊட்டச்சத்து தேவைகள் மாறுகின்றன. இதனால், நம் உடலுக்கு குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன.
உங்கள் வயதுக்கு ஏற்ற உணவுகளை எப்போதும் உண்ண வேண்டும். உங்கள் வயதுக்கு ஏற்ப என்னென்ன உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதை இதில் பார்ப்போம்.
20 வயது
20 வயதில் எலும்பின் அடர்த்தி தொடர்ந்து அதிகரித்து வரும். இந்த வயதில் எலும்பு ஆரோக்கியத்திற்கான ஊட்டச்சத்து உணவுகள் முக்கியமானது.

பால் பொருட்கள், பச்சை காய்கறிகள், முட்டையின் மஞ்சள் கரு, சால்மன் ,கால்சியம், வைட்டமின் கே, வைட்டமின் டி ஆகியவை சிறந்த ஆதாரங்கள் ஆகும். இவை எலும்பு ஆரோக்கியத்திற்கு அவசியமானவை.
30 வயது
30 வயதில் நீரிழிவு, கொலஸ்ட்ரால், உடல் பருமன் மற்றும் பிற நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது.

முழு தானியங்கள், ஓட்ஸ், பழங்கள், காய்கறிகள் மற்றும் பிற நார்ச்சத்து நிறைந்த உணவுகளைக் கண்டிப்பாக சேர்த்து கொள்ள வேண்டும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள், எண்ணெய் உணவுகள், சர்க்கரை மற்றும் நொறுக்குத் தீனிகளை தவிர்த்து கொள்ள வேண்டும்.
40 வயது
40 வயதில், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.

40 வயதாக ஆகும் போது, உங்கள் உடல், உள் உறுப்புகளுக்கு சேதம் விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட வேண்டும்.

இதற்கு தக்காளி, மாதுளை, செர்ரி, பெர்ரி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை எடுத்து கொள்ள வேண்டும்.
50 வயது
50 வயதில், உடல் செயல்பாடுகள் குறைய தொடங்கி, உடல் வலுவிழந்து பல்வேறு நோய் தொற்றுக்கள் ஏற்படும்.

இந்த வயதில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வகை 2 நீரிழிவு போன்ற பிரச்சினைகள் வர கூடும் என்பதால் எடையை கண்காணிக்க வேண்டும்.

நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க குறைந்த கொழுப்பு, குறைந்த ஜி.ஐ, ஏராளமான பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ண வேண்டும்.
60 வயது மற்றும் அதற்கு மேல்
வயதாகும்போது உடலியல் மற்றும் உளவியல் மாற்றங்கள் நிறைய ஏற்படுகின்றன.

அவை ஊட்டச்சத்து தேவைகளில் நேரடி விளைவை ஏற்படுத்துகின்றன.

வயதாகும்போது, பசியின்மை குறையும். எனினும் உட்கொள்ளும் உணவு ஆரோக்கியமானதாகவும், சத்தானதாகவும் இருக்க வேண்டியது கட்டாயம்.
உடற்பயிற்சிகள்
மது அருந்துதல், புகைபிடித்தல் மற்றும் செயலற்ற நிலையில் இருப்பது எலும்புகளை கடுமையாக சேதப்படுத்தும்.

வலுவான எலும்புகள் மற்றும் மூட்டுகளுக்கு, எடை தாங்கும் உடற்பயிற்சி , ஏரோபிக் ஆகியவற்றை செய்ய வேண்டும்.

இதனுடன் கூடுதலாக விறுவிறுப்பான நடைபயிற்சி, யோகா மற்றும் ஜாகிங் போன்றவற்றையும் செய்ய வேண்டும்.