இந்த உணவுகளை தப்பி தவறி கூட குழந்தைகளுக்கு கொடுத்து விட கூடாது
வளரும் குழந்தை மற்றும் பிறந்து ஒரு வருடமான குழந்தைகளை மிகுந்த கவனத்துடன் கவனித்து கொள்வது பெற்றோரின் கடமை . குழந்தைகள் வளரும் வரை அவர்களுக்கு எது செய்தாலும் பார்த்து பக்குவமாக செய்ய வேண்டும்.
குழந்தைகள் வளரும்போது, அவர்களுக்கு ஆரோக்கியமான உணவு கொடுப்பது முக்கியம். ஏனெனில், உணவு உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
புதிய உணவுகளை குழந்தைக்கு கொடுக்க முயற்சித்தாலும் அல்லது குழந்தை சாப்பிட ஆர்வமாக இருந்தாலும், குழந்தைகள் சாப்பிடக் கூடாத சில உணவுகள் உள்ளன.
குழந்தைகளின் வயிறு இடம் அளிக்கும் வரை பெற்றோர்கள் இதை பின்பற்ற வேண்டும். குழந்தைகளின் உடல் முழு வளர்ச்சி அடையாததால் சில உணவையும் உட்கொள்ள முடியாது.
சில உணவுகளை குழந்தைகளால் ஜீரணிக்க முடியாது என்பதால், குறிப்பிட்ட உணவுகளை மட்டுமே உட்கொள்ள கொடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு இது தெரியாது. பெற்றோரே கவனம் செலுத்த வேண்டும். இதில் அலட்சியம் காட்டினால் குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும்.
ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை மட்டுமே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு கொடுக்க கூடாத சில உணவுகளை பற்றி இதில் பார்க்கலாம்.
குழந்தைகளின் சிறுநீரகங்கள் அதிக உப்பைச் செயலாக்கும் திறன் கொண்டவை அல்ல, இதனால் குழந்தைகளின் உணவில் அதிக உப்பு சேர்க்க கூடாது. அதிகப்படியான உப்பு குழந்தைகளின் மூளையில் சேதத்தை விளைவிக்கும்.
அதிக சர்க்கரை கொண்ட உணவு பொருட்கள் குழந்தைகளுக்கு பல் சிதைவை ஏற்படுத்தும். பழங்கள், மிட்டாய்கள், சாலடுகள் மற்றும் சாக்லேட்கள் அதிக இனிப்புகளை கொண்டு உள்ளன. இந்த காரணத்திற்காக இவற்றை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
தேன் குழந்தைகளின் போட்டுலிசத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் தேன் குழந்தைகளுக்கு ஆபத்தானது. மேலும் இவை குழந்தைகளுக்கு சோம்பல், பசியின்மை மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்தும். இந்த காரணங்களினால் குழந்தைகளுக்கு தேன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
குழந்தைகளுக்கு முட்டை ஜீரணிப்பதில் சிரமத்தையும், நட்ஸ்கள் மூச்சுத் திணறலையும் ஏற்படுத்துகின்றன. இதனால் குழந்தைகளுக்கு முட்டை மற்றும் நட்ஸ்கள் கொடுப்பதை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்
குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்படாது எனில்,முட்டையின் வெள்ளை கருவை அளவோடு கொடுக்கலாம். ஆனால் முட்டையின் வெள்ளை கருவை கொடுக்கும் போது எரிச்சல், தடிப்புகள் வயிற்றுப்போக்கு ஏற்படுமாயின், உடலை பரிசோதித்த பிறகு தான் கொடுக்க வேண்டும்.
பசுவின் பாலில் அதிகமாக லாக்டோஸ் அமிலம் இருப்பதால், இது குழந்தையின் சிறிய வயிற்றை மோசமாக பாதிக்கும். இதனால் குழந்தைக்கு ஒரு வயது ஆகும் வரை பசுவின் பாலை குடிக்க கொடுக்க கூடாது.