Tap to Read ➤

குளிர் காலத்தில் குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க வேண்டிய உணவுகள்

வெயில் காலத்தில் எப்படா மழை மற்றும் குளிர் காலம் வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்போம். அதுவே, மழை மற்றும் குளிர் காலம் வந்து விட்டால் எப்படா இந்த சீசன் முடியும் என்று திட்டுவதும் உண்டு.
ஏனென்றால், இந்த சீசனில் குளிர் ஒரு பக்கம் வாட்டி எடுத்தாலும், மறு பக்கம் ஏராளமான நோய் தொற்றும் வந்து நம்மை பாடாய் படுத்தி விடும்.
பெரியவர்களாக இருந்தால் கூட சமாளித்து விடலாம். ஆனால் இந்த நோய் தொற்றுகளில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது என்பது பெரும் சவாலான விஷயம்.
குழந்தைகளுக்கு இயற்கையாகவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இதனால் மிகவும் எளிதில் பாதிப்புக்கு உள்ளாகி விடுவார்கள்.
எந்த காலமாக இருந்தாலும், குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தக் கூடிய உணவுகளை கொடுப்பதன் மூலம், எந்த நோயும் அண்டாமல் பார்த்து கொள்ள முடியும்.
அந்த வகையில் குளிர் காலத்தில் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த கூடிய ஊட்டச்சத்து மிக்க உணவுகளை பற்றி இங்கு பார்க்கலாம்.
வெல்லம் உடலில் வெப்பத்தை உண்டாக்கி, குளிர் காலத்தில் இருந்து நம்மை பாதுகாக்கும். தினமும் சிறிதளவு வெல்லத்தை உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள். அல்லது வெது வெதுப்பான தண்ணீரில் சிறிதளவு வெல்லத்தை கலந்து கொடுக்கலாம்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இருக்கும் பீட்டா கரோட்டின், வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து போன்றவை உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவடையச் செய்து, நோய் தொற்று ஏற்படுவதை தடுக்கிறது.
பேரீச்சம் பழத்தில் இரும்புச்சத்து மட்டுமல்ல, வைட்டமின் ஏ மற்றும் சுண்ணாம்பு சத்தும் அதிகம். இது இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்து, நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும்.
இயற்கையிலேயே இனிப்பு சுவை கொண்ட, இந்த பீட்ரூடில் நார்ச்சத்து அதிகம். எனவே, பீட்ரூட்டை மற்ற நாட்களில் சாப்பிடுவதை விட குளிர்காலங்களில் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
நெல்லிக்காயில் இருக்கும் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் வைரஸ் மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்துகிறது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று நெல்லிக்காயாவது குழந்தைகளுக்கு சாப்பிட கொடுங்கள்.
குளிர் காலத்தில் சருமம் வறட்சி ஏற்படுவது இயல்பான ஒன்று. சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவது சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கும். இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, காய்ச்சலை ஏற்படுத்தாமல் பாதுக்காக்கிறது.