Tap to Read ➤

Hemoglobin Increase Food In Tamil | Food To Increase Hemoglobin Level

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் உணவுகள்
ஆக்சிஜனை எடுத்து செல்லும் இரத்தத்தை, உடலின் அனைத்து பாகங்களுக்கும் கொண்டு செல்ல ஹீமோகுளோபின் உதவுகிறது.
இரும்புச்சத்து நிறைந்த ஹீமோகுளோபின் ஒரு முக்கியமான புரதம். ஹீமோகுளோபின் இரத்தத்தை, உடலின் அனைத்து பாகங்களுக்கும் கொண்டு செல்ல தேவைப்படுகிறது.
ஆரோக்கியமான வாழ்க்கை வாழ இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு சரியான அளவில் இருக்க வேண்டும். ஹீமோகுளோபின் குறைபாடு இரத்த சோகை என அறியப்படுகிறது.
இதில் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் மற்றும் இரத்த சோகைக்கு மருந்தாகும் உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
பேரீச்சம்பழம் மற்றும் திராட்சைகளில் இரும்புச்சத்து, விட்டமின் சி உள்ளது. அத்திப்பழம் இரும்பு, மெக்னீசியம், விட்டமின் ஏ மற்றும் ஃபோலேட் ஆகியவற்றை கொண்டு உள்ளது.

 உலர்ந்த அத்திப்பழங்கள், திராட்சைகள் மற்றும் பேரீச்சம்பழங்களை காலையில் சாப்பிடுவது ஆற்றலைக் கொடுக்கும். மேலும் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும்.
கீரை இரும்புச்சத்துக்கான நல்ல ஆதாரம். இது ஹீமோகுளோபின் அதிகரிக்க உதவும். சமைக்காத பச்சை கீரையில் ஆக்ஸாலிக் அமிலம் உள்ளது.

 சமைக்காத பச்சை கீரை உடலில் இரும்புச்சத்து சேருவதை தடுக்கும். இதனால் வேக வைத்த கீரையை தான் சாப்பிட வேண்டும்.
ப்ரோக்கோலி இரும்புச்சத்து, பி-காம்ப்ளக்ஸ், மெக்னீசியம், விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி போன்ற முக்கிய தாதுக்களை கொண்டு உள்ளது.

 ப்ரோக்கோலி, இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதோடு உடல் எடையை குறைக்கவும் செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
பீட்ரூட்டில் இரும்புச்சத்து, மெக்னீசியம், தாமிரம், பாஸ்பரஸ் விட்டமின் பி1, விட்டமின் பி2, விட்டமின் பி6, விட்டமின் பி12 மற்றும் விட்டமின் சி ஆகியவை உள்ளன.

 இவை இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, இரத்த சிவப்பணுக்களின் மீள் உருவாக்கத்தை ஊக்குவிக்கிறது.
முருங்கை இலையில் துத்தநாகம், இரும்பு, தாமிரம், மெக்னீசியம் விட்டமின் ஏ, விட்டமின் பி மற்றும் விட்டமின் சி போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.

 முருங்கை இலைகளை உணவில் சேர்த்துக் கொள்வது இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும்.
கருப்பு எள்ளில் இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், தாமிரம், துத்தநாகம், செலினியம், விட்டமின் பி6, விட்டமின் ஈ மற்றும் ஃபோலேட் ஆகியவை நிறைந்து உள்ளது.

 எள்ளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் சாப்பிடலாம். உலர்ந்த அல்லது வறுத்த கருப்பு எள் விதைகளை ஒரு தேக்கரண்டி தேனுடனும் எடுத்து கொள்ளலாம்.