இந்த பழங்களை சர்க்கரை நோயாளிகள் பயமில்லாமல் தாராளமாக சாப்பிடலாம்
ஆப்பிள்
ஆப்பிளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட்டுகள், உடலில் கொலஸ்ட்ராலை தங்கவிடாது. சர்க்கரை நோயாளிகள் ஆப்பிளை சாப்பிட்டால் உடலில் ரத்த சர்க்கரை அளவு குறையும். அதுவும் பச்சை நிற ஆப்பிளாக இருந்தால் இன்னும் சிறந்தது.
இரத்ததை சுத்தப்படுத்துகிறது. புதிய இரத்த உற்பத்திக்கும் உதவுகிறது. வயிறு சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் இதை தினமும் சேர்த்துக்கொள்ளலாம். தினமும் ஒன்று போதுமானது. இது சர்க்கரை நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கிறது.
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் மிக அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டிய பழம் என்றால் பப்பாளி தான். பப்பாளியில் அதிகளவு வைட்டமின்களும், மினரல்களும் இருக்கின்றன. இது உடலில் இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும்
ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் கொய்யாப்பழத்திற்கு இணை கொய்யா தான். இது மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது. நார்சத்தும் அதிகம். எனவே, பயப்படாமல் சாப்பிடலாம்.
நாவல் பழம் சர்க்கரை நோயாளிக்கு வரபிரசாதம் என்றே சொல்லலாம். ஏனென்றால், இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது. இதன் கொட்டையும் சர்க்கரை நோயாளிக்கு அருமருந்தாக பயன்படுகிறது
செர்ரி வகை பழங்களில் குளுக்ஸகோஸின் அளவு 20 க்குள் தான் இருக்குமாம். சர்க்கரை நோயாளிகள் இந்த வகை பழங்களை ஸ்நாக்ஸ்க்கு பதிலாக எந்த நேரத்திலும் தாராளமாக சாப்பிடலாம்
கிவி
சிட்ரஸ் வகை பழங்களுள் கிவி பழம் மிகவும் சுவையானதாக இல்லாவிட்டாலும் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இந்த பழத்தை சர்க்கரை நோயாளிகள் தினமும் சாப்பிட்டு வந்தால் அது அவர்களுக்கு மிகச் சிறந்த பலனைக் கொடுக்கக்கூடியது