Tap to Read ➤

கோல்டு ATM | Gold ATM Machine in India

பணத்தை மட்டுமல்ல இனி தங்கத்தையும் ஏடிஎம்-ல் எடுக்கலாம்... கோல்டு ஏடிஎம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை....!
மக்கள் எளிதாக ஏடிஎம்-ல் பணம் எடுப்பது போல், தங்கம் எடுக்க ஏடிஎம் இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் தங்க ஏடிஎம், கோல்ட்சிக்கா-ஆல் ஹைதராபாத்தைத் தளமாகக் கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனமான ஓபன் கியூப் டெக்னாலஜிஸின் தொழில்நுட்ப ஆதரவுடன் நிறுவப்பட்டது
இந்த தங்க ஏடிஎம் பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டு விளங்குகிறது. எளிமையாகப் பயன்படுத்தும் வகையிலும், முழு நேரம் அதாவது 24 x 7 நேரத்தில் கிடைக்கும் வகையிலும் உள்ளது.
ஏடிஎம்-ல் பணம் எப்படி எளிதாக எடுக்குமாறு அமைகிறதோ, தங்க ஏடிஎம்களும் வாடிக்கையாளர்களை எளிதாக தங்கம் வாங்க அனுமதிக்கிறது.
எந்த கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தியும், தங்க ஏடிஎம்கள் மூலம் தங்கத்தை உடனடியாக வாங்க முடியும்.
தங்க ஏடிஎம்-களில் வாங்கப்படும் தங்கமானது, நேரடி விலையை அடிப்படையாகக் கொண்டு மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதன் படி, இந்த தங்க ஏடிஎம்-களில் குறைந்தபட்சம் 0.5 கிராம் முதல் அதிகபட்சம் 100 கிராம் வரையிலான தங்கங்களைப் பெறலாம்.
www.searcharoundweb.com