Healthy Hot Drink In The Morning | Early Morning Drink
Healthy Morning Drink Recipes: காலையில் எழுந்ததும் தண்ணீருக்கு பதிலாக இனிமேல் இந்த பானங்களை குடியுங்கள். ஏன் தெரியுமா?
காலை உணவு எவ்வளவு முக்கியம் என்பதை அனைவரும் அறிவோம். அது போல், சரியான பானத்துடன்
நாளை தொடங்குவதன் மூலம், நீண்ட நேரத்திற்கு புத்துணர்ச்சி ஆக இருக்க முடியும்.
புத்துணர்ச்சி ஊட்டும் பானத்தை ஒரு கிளாஸ் குடிப்பதன் மூலம் ஒரு நல்ல தொடக்கத்தை பெறலாம்.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான பானங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
காலையில் எழுந்திருக்கும் போது உடல் நீரிழப்பில் இருக்கும். இதற்கு ஆரோக்கியமான பானங்களை
குடிப்பது உதவியாக இருக்கும். காலையில் குடிக்க வேண்டிய சில சிறந்த பானங்கள் பற்றி இதில் பார்க்கலாம்.
வெள்ளரி, தர்பூசணி கலந்த தண்ணீர்
எலுமிச்சை பழங்கள் கலந்த தண்ணீர்
காய்கறி சாறுகள்
பச்சை தேயிலை தேநீர் - கிரீன் டீ
தேன், இலவங்கபட்டை பானம்
காலையில் எழுந்ததும் வயிறு அதிக அமில தன்மையுடன் இருக்கும். இரவு முழுவதும் ஏதும் சாப்பிடாமல் இருப்பதால் காலையில் உடலில் வளர் சிதை மாற்றமும் மெதுவாக இருக்கும்.
இதனால் குடல் மற்றும் வயிறு மென்மையாக இருக்கும். இது ஊட்டச்சத்துக்களை எளிதில் உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
காலையில் ஊட்டச்சத்து பானத்துடன் நாளை தொடங்கினால், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.