ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் வரும் ஜனவரி 23 ஆம் தேதி புதிய இரு சக்கர வாகனத்தை அறிமுகம் செய்ய உள்ளது.
இது குறித்து தனது அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கத்தில் டீசரை வெளியிட்டது.
வாடிக்கையாளர்களுக்கு இதை தெரியப்படுத்தும் வகையில் சமூக வலைதள பக்கத்தில் டீசரை வெளியிட்டு,
"புதிய ஸ்மார்ட்டைக் கண்டுபிடிக்க தயாராகுங்கள்" என்று கேட்டுக் கொண்டது.
வரவுள்ள இந்த வாகனம் ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (HMSI) ஆக்டிவாவின்
ஹைப்ரிட் மாறுபாட்டை, இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னர் ஹோண்டா வெளியிட்ட வாகனங்களில் ஹோண்டா எகோ டெக்னாலஜி மற்றும் வாகனங்களில்
உராய்வைக் குறைக்க பிஎஸ்6 டிரான்சிஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது.
வர உள்ள வாகனத்திலும் மேம்படுத்தப்பட்ட புதிய தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
AI இந்த தொழில் நுட்பத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது .
செலவுகளை குறைக்கும் வகையில் புதிய ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.
எலெக்ட்ரிக் பைக்குகளை போன்று ரீசார்ஜ் செய்யக்கூடிய தனி பேட்டரி வர இருக்கிறது
வர இருக்கிற இந்த வாகனம் 10-15 கிமீ மின்சார வேகத்தில் பயணம் செய்ய முடிந்தால், ஒரு கேம் சேஞ்சராக இருக்கும்
மேலும் இந்த வாகனம் மணிக்கு 40 கிலோமீட்டர் வரை செல்லும் என்று எதிர் பார்க்கப்படுகிறது
நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள ICE பயன்பாடு இருக்கிறது . எரிபொருள் செலவு மற்றும் மலிவான வகையில் வாகனங்களை பயன்படுத்த விரும்புபவர்களுக்கு இது சிறந்த தேர்வு