Tap to Read ➤

வாட்ஸ் அப்பில் தேவையில்லாத ஃபைல்ஸ்களை டெலிட் செய்வது எப்படி?

உலக அளவில் பல கோடி மக்களால் பயன்படுத்தப்படும் மிகவும் பிரபலமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்ஸாக இருக்கிறது வாட்ஸ் அப்.
இருப்பினும் கான்டாக்ட்ஸ் மற்றும் வாட்ஸ் அப் குரூப்களில் ஷேர் செய்யப்படும் மீடியாக்கள் மற்றும் டேட்டாக்கள் டிவைஸின் இன்டர்னல் மெமரி ஸ்டோரேஜை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து இறுதியில் அதை மிகவும் ஸ்லோவாக மாற்றி விடுகின்றன.இந்த சிக்கலை தவிர்க்க டிவைஸின் ஸ்டோரேஜை க்ளியர் செய்ய வேண்டும்.
எந்த டேட்டாவையும் டெலிட் செய்வதற்கு முன், டிவைஸில் வாட்ஸ் அப் எவ்வளவு ஸ்பேஸை எடுத்து கொள்கிறது என்பதை சரி பார்க்க வேண்டும். WhatsApp Settings-ற்கு சென்று Storage and data > Manage storage சென்று பார்க்கவும். இங்கே வாட்ஸ்அப் மீடியா எவ்வளவு ஸ்பேஸை எடுத்து கொண்டிருக்கிறது என்பதை பார்க்கலாம்.
வாட்ஸ் அப் செட்டிங்ஸில் காணப்படும் Storage and data-விற்கு சென்று Manage storage-க்கு செல்ல வேண்டும். பின் Manage Storage-ன் கீழ் Larger than 5 MB ஆப்ஷன் அல்லது கீழ்காணும் குறிப்பிட்ட சேட்-ஐ க்ளிக் செய்ய வேண்டும். இதில் Newest, Oldest, Largest உள்ளிட்ட ஆப்ஷன்களை பயன்படுத்தி மீடியாவையும் வரிசைப்படுத்தலாம்.
பிறகு தனிப்பட்ட அல்லது மல்டிபிள் மீடியாவை செலக்ட் செய்து அவற்றை டெலிட் செய்ய வேண்டும். வாட்ஸ் அப்பில் இருந்து குறிப்பிட்ட மீடியாவை டெலிட் செய்த பிறகும் அவை உங்கள் மொபைல் ஸ்டோரேஜில் இருக்கும்.அதை நிரந்தரமாக டெலிட் செய்ய ஃபோன் கேலரியில் இருந்து டெலிட் செய்ய வேண்டும்.
வாட்ஸ் அப் சேட்ஸ் Tab-ஐ ஓபன் செய்து பின் வலது மூலையில் இருக்கும் சர்ச் ஐகானை டேப் செய்ய வேண்டும் . டெலிட் செய்ய விரும்பும் மீடியாவை (ஃபோட்டோக்கள், வீடியோக்கள் & டாக்குமென்ட்ஸ்) சர்ச் செய்தும் நீக்கலாம் . நீக்க விரும்பும் item-ஐ ஓபன் செய்து , இப்போது More > Delete என்பதை டேப் செய்ய வேண்டும் .