Tap to Read ➤

வால்நட்ஸை தினமும் உணவில் எப்படி சேர்த்து கொள்வது?

உடலுக்கு நன்மை தரும் உணவுகளில் வால்நட் சிறந்தது. நார்ச்சத்து, மாவுச்சத்து, வைட்டமின், புரொட்டீன் மற்றும் இரும்புச்சத்து என பல சத்துகள் வால்நட்டில் அடங்கியுள்ளன.
கொழுப்புகள் - 0
 சோடியம் - 0.2 மில்லி கிராம் பொட்டாசியம் - 441 மில்லி கிராம்
 புரதச்சத்து - 15 கிராம் உள்ளது
 வைட்டமின்ஸ் - ஏ, B-12, D கால்சியம்
வால்நட்டில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்
வால்நட்டை தினமும் உணவில் எடுத்து கொள்வது உடல் எடை குறைப்பு மற்றும் உடலின் அனைத்து உறுப்புகளும் நன்றாக செயல்பட உதவி புரிகிறது. இந்த வால்நட்டை எந்த வகையில் உபயோகிக்கலாம் என்று பார்க்கலாம்.
நீரில் ஊற வைக்கப்பட்ட வால்நட்

 ஒரு நாள் முன்பு, இரண்டு அல்லது மூன்று வால்நட்களை நீரில் ஊற வைக்கப்பட்ட பின்பு அதை காலையில் எடுத்து சாப்பிடலாம். இதனால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும். ஊற வைக்கப்பட்ட வால்நட் சீக்கிரம் செரிமானம் ஆகி விடும்.
வால்நட் சட்னி

 தேவையான வால்நட்ஸை வறுத்து எடுத்துக்கொண்டு, இதோடு பூண்டு, எலுமிச்சைச்சாறு, எண்ணெய், மிளகு மற்றும் உப்பு சேர்த்து அரைத்து வால்நட் சட்னி செய்யலாம். இப்படி செய்வதால் வால்நட்ஸின் பயன் நமக்கு கிடைக்கும்.
வால்நட் சாண்ட்விச்

வால்நட்ஸை நன்றாக வறுத்து பொடியாக்கி காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைத்து விடலாம். இதைத் தேவையான போது சாண்ட்விச் அல்லது சாலட்டுக்குள் வைத்து சாப்பிடலாம்.
வால்நட் ஸ்மூத்தி

நம்மில் பெரும்பாலோர் ஸ்மூத்தியை குடிக்க கூடியவர்களாக இருக்கிறோம். காலை, மாலை நேரங்களில் செய்யப்படும் ஸ்மூத்திகளில் மூன்று, நான்கு வால்நட்ஸ்களைச் சேர்த்து அரைத்து ஸ்மூத்தி செய்யலாம்.
வால்நட் ஸ்நாக்ஸ்

வால்நட் உடன் தேன் மற்றும் கோகோ பவுடர் ஆகியவற்றை சேர்த்து கிரீம் செய்து அவற்றை காற்று புகாத பாட்டிலில் வைத்து விடலாம். இதை பிரெட்டுடன் தடவியோ அல்லது தனியாகவோ சாப்பிடலாம். இது சுவையான மற்றும் ஆரோக்கியமான ஸ்நாக்ஸாக இருக்கும்.