குழந்தைகளை காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வைக்க உதவும் வழிகள்
தினமும் குழந்தைகளை சீக்கிரமாக எழுந்திருக்க வைப்பது மிகவும் சிரமமாக இருக்கும். அப்போது பெற்றோர்கள், குழந்தைகள் எழுந்திருக்காமல் இருக்கிறார்கள் என்பதற்காக திட்டுவார்கள்.
குழந்தைகள் அதை காதில் வாங்காமல், புறக்கணித்து விட்டு ரொம்ப நேரம் தூங்க விரும்புவார்கள்.
இவ்வாறு இருப்பது ஆரோக்கியமான பெற்றோர் - குழந்தைகள் உறவாக இருக்க முடியாது.
குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு நன்றாக தூங்க வேண்டியது அவசியம்.
இதற்காக குழந்தைகளுக்கு நல்ல தூக்க பழக்கத்தை கற்பிக்க வேண்டும்.
தினமும் காலையில் சீக்கிரம் எழுந்திருப்பது குழந்தைகளை உற்சாகமாக வைத்து இருக்க உதவும் . மேலும் இது ஒரு நல்ல பழக்கமாகவும் இருக்கும்.
தினமும் காலையில் குழந்தைகளை சீக்கிரம் எழுந்திரிக்க வைப்பது கொஞ்சம் சவாலான செயல் தான். இதில்
குழந்தைகளை சீக்கிரம் எழுப்ப உதவும் உதவி குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பெற்றோர்கள், குழந்தைகள் எவ்வளவு நேரம் தூங்கினால் அவர்களுக்கு நல்லது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
6 முதல் 11 வயது வரை உள்ளவர்கள் குறைந்தது 10 மணி நேரம் வரை தூங்க வேண்டும்
12 முதல் 18 வயது வரை உள்ளவர்கள் குறைந்தது 9 மணி நேரம் வரை தூங்க வேண்டும்.
கத்துவது, அடிப்பது, மின் விசிறியை அணைப்பது, முகத்தில் தண்ணீர் ஊற்றுவது மற்றும் போர்வையை அகற்றுவது போன்ற வழிகள் மூலம் குழந்தையை எழுப்ப கூடாது.
இது குழந்தையின் மன நிலையை பாதிக்கும்.
இதை போன்று இல்லாமல் வேறு வழிகள் மூலம் குழந்தைகளை எழுப்ப வேண்டும்.
பள்ளி நாட்கள், விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்கள் என ஒவ்வொரு நாளும் உறங்கும் மற்றும் விழித்தெழும் நேரம் ஆகியவை வழக்கமாக இருக்க வேண்டும்.
குறித்த நேரத்தில் தூங்கி, குறித்த நேரத்தில் எழுந்திருப்பது ஒரு நல்ல வழக்கத்தை நிறுவவும், அவர்களை ஒழுங்குபடுத்தவும் உதவும்.
குழந்தைகளை சீக்கிரம் எழுந்திருப்பதை உறுதி செய்வதற்கான சிறந்த வழி, சீக்கிரம் தூங்க வைப்பதாகும்.
இந்த முறையைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் அதை ஒரு பழக்கமாக மாற்ற வேண்டும் .
குழந்தைகளை நேர்மறையான எதிர்பார்ப்புடன் தூங்க செல்ல அனுமதித்தால், அது அவர்களை சீக்கிரம் எழுப்புவதற்கான வழிகளில் ஒன்றாக இருக்கும்.
இது குடும்பத்தின் கூட்டு முயற்சி ஆகும். இதில் குழந்தையின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
தூக்கத்தை பாதிக்கும் காரணங்கள் :
சத்தம், குறட்டை விடுவது
அதிக வெளிச்சம் இரவில் மொபைல் உபயோகித்தல் தாமதமாக தூங்க செல்வது படுக்கை அறை சூடாக இருத்தல்
அதிக நேரம் விளையாடுதல் இருட்டை பார்த்தால் பயம்
பாதுகாப்பான மற்றும் வசதியான சூழலில்
குழந்தைகளை தூங்க வைப்பது அவசியம் ஆகும்.