Tap to Read ➤

தூக்கமின்மை பிரச்சனையா? அப்ப இந்த வழிகள ஃபாலோ பண்ணுங்க , தூக்கம் வரும்

பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் டிஜிட்டல் காலம் நம்முடைய தூக்கத்தில் குறுக்கிட்டு, தூக்கமின்மை பிரச்சனையை ஏற்படுத்துகின்றன. நம் தூக்கத்தை சீர்குலைக்க பல காரணங்கள் உள்ளன. வேலை அழுத்தம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை பொறுப்புகள் தூக்கமின்மை பிரச்சனையை ஏற்படுத்தக்கூடிய காரணிகளாக உள்ளன.
தூக்கமின்மை பல்வேறு உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. எனவே தூக்கத்தை எப்படி சரி செய்வது என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும். தூக்கத்தை மீண்டும் சரியான பாதையில் கொண்டு வருவதற்கான விஷயங்களை பின்பற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது. அவை என்னவென்று இதில் பார்க்கலாம்.
1. பகலில் தூங்குவதை தவிர்க்க வேண்டும்
2. படுக்கை அறையில் விளக்குகளை அணைக்க வேண்டும்
3. தூங்குவதற்கு முன் சூடான நீரில் குளிக்கலாம்
4. தூங்குவதற்கு முன் சிறிது நேரம் இசையை கேட்கலாம்
5. தூங்குவதற்கு முன் சிறிது நேரம் புத்தகத்தை படிக்கலாம்
6. தூங்குவதற்கு முன் கொஞ்சம் மஞ்சள் பால் குடிக்கலாம்
7. தூங்குவதற்கு முன் கால்களை மிதமான சூடான நீரில் நனைக்கலாம்