Tap to Read ➤
சர்வதேச ஆண்கள் தினம்
சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாட என்ன காரணம் தெரியுமா...?
சர்வதேச ஆண்கள் தினம் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 19-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது
ஆண்களின் உடல் நலன், மனநலன் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த கொண்டாடப்படுகிறது
ஆண்களுக்கான இந்த தினத்தில் 6 அடிப்படைக் கொள்கைகள் கடைபிடிக்கப்படுகின்றன
அன்றாட வாழ்வில் உழைக்கும் ஆண்களை, மற்றவர்களுக்கு முன்மாதிரியாக உருவாக்க பாடுபடுவது.
ஆண்களின் ஆரோக்கியம் மற்றும் சமூக, உணர்ச்சி, உடல் மற்றும் ஆன்மீக நல்வாழ்வு சிறப்பாக அமைய உறுதியளிப்பது.
பல்வேறு தளங்களில் அவர்கள் ஒடுக்கப்படுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
சமூகம், குடும்பம், திருமண உறவு, குழந்தை பராமரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு ஆண்கள் பங்களிப்பைக் கொண்டாடுவது
பாலின சமத்துவத்தை மேம்படுத்துதல் மற்றும் மற்ற பாலினங்களோடான உறவை மேம்படுத்துதல்
ஒவ்வொருவரும் தங்கள் முழுமையான திறனை வெளிப்படுத்த முறையான வாய்ப்புகளை அளித்தல்.
மகத்தான பல தியாகங்கள் புரிந்து குடும்பத்தையும், சமூகத்தையும் மேம்படுத்தும் ஆண்களுக்கு சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துக்கள்