ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய இவானா... லவ் டுடே மூவி இவானா லேட்டஸ்ட் க்ளிக்ஸ்...
லவ் டுடே படத்தின் கதாநாயகியான இவானாவின் இயற்பெயர் "அலீனா ஷாஜி". இவர் கேரளாவில் உள்ள சங்கனாச்சேரியில் பிப்ரவரி 25, 2000-ல் பிறந்தார்
இவர் முக்கியமாக தமிழ் மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்
இவானா 2012 இல் வெளியான மாஸ்டர்ஸ் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார்
இவானா பின்னர் 2016 இல் வெளியான "அனுராகா கரிக்கின் வெல்லம்" என்ற மற்றொரு மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தின் மகளாக நடித்து இருந்தார்.
அதன் பிறகு இயக்குனர் பாலா இணையத்தில் "அனுராகா கரிக்கின் வெல்லம்" பற்றிய செய்தியைப் பார்த்தார்.
பிறகு 2018 இல் இயக்குனர் பாலா தயாரிப்பில் வெளியான ஜோதிகா மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமார் முக்கிய வேடங்களில் நடித்த நாச்சியார் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்
தமிழ் ரசிகர்கள் எளிதாக உச்சரிக்க மேடைப் பெயரை பயன்படுத்த வேண்டும் என்று இயக்குனர் பாலா கேட்டுக் கொண்டார். அதன் காரணமாக உறவினரின் உதவியுடன் இவானா என்று தன் பெயரை மாற்றி கொண்டார்
நாச்சியார் படத்தில் அவரது கதாபாத்திரத்திற்காக, தமிழ் வகுப்புகளை மேற்கொண்டு, அரசி என்ற கேரக்டரில் இளம், அப்பாவிப் பெண்ணாக நடித்ததற்காக நல்ல பாராட்டைப் பெற்றார்
2019 இல் வெளியான சிவகார்த்திகேயன் நடித்திருந்த ஹீரோ படத்தில் "மதி" என்ற கேரக்டரில் நடித்து இருந்தார்.
சமீபத்தில் இவர் நடித்த பிரதீப் இயக்கத்தில் வெளியான லவ் டுடே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது
லவ் டுடே படத்தில் இவானாவின் நடிப்பை பார்த்து பல புதிய பட வாய்ப்புகள் வரத் தொடங்கியிருக்கிறதாம் .
இவானா விரைவில் பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்க கமிட் ஆகலாம் என்று எதிர்பார்க்கலாம்