Tap to Read ➤
தமிழ்நாடு - ஜல்லிக்கட்டு போட்டியும் அதற்கான வழிகாட்டுதலும்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது குறித்து தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள ஜல்லிக்கட்டு போட்டியின் வழிகாட்டு நெறிமுறைகளை இதில் பார்க்கலாம்
ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன் கூட்டி ஒரு நாளுக்கு முன்பே உறுதி செய்யப்பட வேண்டும்.
ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்யாளர்களின் கீழ் தலைமை குழு அமைத்து கண்காணிக்கப்பட வேண்டும்.
ஜல்லிக்கட்டின் போது காளைகளுடன் 2 நபருக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்படும். காளைகளுக்கு தேவையற்ற வலியை உருவாக்கும் எந்த செயலையும் செய்ய கூடாது
காளைகளுடன் அனுமதிக்கப்படும் மாடுபிடி வீரர்கள் 2 டோஸ் தடுப்பூசி சான்றிதழ், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் போன்றவற்றை கட்டாயம் வைத்து இருக்க வேண்டும்.
காளைகள் அவிழ்த்து விடப்படும் நேரத்தில் இருந்து, போட்டி முடியும் வரை உள்ள அனைத்து நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும்.
மாவட்டங்களில் அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி இல்லை .
மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெறாதவர்கள் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முடியாது. மீறினால் குற்றவியல் நடவடிக்கை அவர்கள் மீது எடுக்கப்படும்.