ஜியோ நிறுவனம் மலிவு விலையில் பல ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த நிலையில் தற்போது தனது நிறுவனத்தின் லேப்டாப்பை அறிமுகப்படுத்தி உள்ளது.
விரைவில் இது பொது மக்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோபுக் ஏற்கனவே இந்தியா மொபைல் காங்கிரஸ் 2022-ன் 6 ஆவது எடிஷனை காட்சிக்கு வைத்தது.
ஜியோ லேப்டாப் குவால்கம் ஸ்னாப் ட்ராகன் 665 ஆக்டா-கோர் ப்ராஸசர் மூலம் இயக்கப்படுகிறது. இது நிலையான ஃபேக்டர் மற்றும் மெட்டாலிக் ஹிங்க்ஸ் உடன் வருகிறது.
ஜியோ லேப்டாப், தனது நிறுவனத்தின் சொந்த ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் இதிலுள்ள சேஸிஸ் ஏபிஎஸ் பிளாஸ்டிக்கால் ஆனது