Karunas Daughter Wedding Images | Karunas Daughter Name
Karunas Daughter Wedding Photos: கோலாகலமாக நடைபெற்ற நடிகர் கருணாஸ் மகள் திருமணம்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகராக அசத்தி வரும் நடிகர்களில் ஒருவர் கருணாஸ். கருணாஸின் மகள் டயானாவின் திருமணம் சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளன.
சூர்யா நடிப்பில் வெளியான நந்தா படத்தில் லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆனார் கருணாஸ். கடந்த ஆண்டு வெளியான கட்டா குஸ்தி படத்தில் பெண்களை அடிமைகளாக நினைக்கும் புத்தி கொண்ட நபராக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருப்பார்.
காமெடியனாக கலக்கி வந்த கருணாஸ் திண்டுக்கல் சாரதி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து அம்பா சமுத்திரம் அம்பானி, ரகளைபுரம் படங்களில் காமெடி கலந்த ஹீரோவாக நடித்து வந்தார். தற்போது குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
தனுசுடன் திருடா திருடி, பொல்லாதவன் படங்களில் நடித்து வந்த நடிகர் கருணாஸ், தன் மகன் கென் கருணாஸை தனுஷ் நடித்த அசுரன் படத்தில் நடிக்க வைத்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.
சமீபத்தில் பெங்களூருவில் உள்ள ஒரு சர்ச்சில் பிரம்மாண்டமான முறையில் தனது மகளின் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார், நடிகர் கருணாஸ் . அதன் பிரத்யேக புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன .
கோட் சூட் அணிந்து தன் மகளின் கைகளை பிடித்து கொண்டு, மணமகன் அருகே தன் மகளை கருணாஸ் கொண்டு செல்லும் அழகிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
தன்னுடைய மகள் டயானா வெள்ளை நிற உடையில் ஏஞ்சல் போல திருமணத்தில் மணமகளாக காட்சியளிப்பதை பார்ப்பதில் பெற்றோருக்கு ரொம்ப சந்தோஷம்.
தனது மகள் திருமணத்தில் கிரேஸ் கருணாஸ் கண்களிலிருந்து கண்ணீரே வந்து விட்டது. மணமகள் டயானா கருணாஸ் மற்றும் மாப்பிள்ளை ருத்விக்கை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.