பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா தனது காதலி கியாரா அத்வானியை பிப்ரவரி 7, 2023 அன்று திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடந்தது.
சித்தார்த் மல்ஹோத்ரா "ஸ்டூடெண்ட் ஆப் தி இயர்"என்ற படத்தின் மூலமும், கியாரா அத்வானி "பக்லி " என்ற படத்தின் மூலமும் அறிமுகம் ஆனார்கள்.
காதல் ஜோடிகளான சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி இருவரும் திருமண பந்தத்தில் சேர இருப்பதாக இணையதளத்தில் தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருந்தன .
2018-ல் வெளி வந்த "லஸ்ட் ஸ்டோரிஸ்" படத்தில் இருவரும் நடித்து இருந்தனர். அதன் பின் 2021-ல் "ஷெர்ஷா" படத்தில் ஒன்றாக நடித்தனர். அச்சமயம் இருவரும் காதல் கொண்டனர்.
இந்நிலையில் கியாரா அத்வானி வலைதளத்தில் திருமண புகைப்படங்களை பகிர்ந்து, "எங்களின் புதிய பயணத்தில் உங்களின் அன்பையும் ஆசீர்வாதத்தையும் வேண்டுகிறோம்" என்று பதிவிட்டிருந்தார்.
திருமணத்தில் கரண் ஜோஹர், ஷாஹித் கபூர்,ரோஹித் ஷெட்டி உள்ளிட்ட முன்னணி பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். பல்வேறு பிரபலங்கலும் சமூக ஊடகங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தற்போது கியாரா அத்வானி இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் "R15" படத்தில் நடித்து வருகிறார். சித்தார்த் மல்ஹோத்ரா ரோஹித் ஷெட்டி இயக்கும் வெப் சீரிஸ் படத்தில் நடித்து வருகிறார்.