Tap to Read ➤

Krishnagiri Tourist Spots | Mini Tajmahal In Tamilnadu

Tourist Spots In Krishnagiri: காதல் மனைவிக்காக பிரிட்டிஷ் தளபதி கட்டிய குட்டி தாஜ்மஹால் - எங்கு இருக்கு தெரியுமா?
மும்தாஜுக்காக ஷாஜஹான் "தாஜ்மஹாலை" கட்டினார். அதுபோல் மெகருன்னிஸா என்ற தன்னுடைய காதலிக்காக ஜான் காம்பெல் குளோவர் என்பவர் மினி தாஜ்மஹாலை கட்டியுள்ளார்.
காதலின் சின்னமென்று சொன்னவுடன் தாஜ்மஹால் தான் சட்டென்று நினைவுக்கு வரும். காதல் மனைவிக்காக பிரிட்டிஷ் தளபதி கட்டிய காதல் நினைவுச்சின்னம் பற்றி தெரியுமா?
திப்பு சுல்தான் வசம் இருந்த ராயக்கோட்டையை பிரிட்டிஷ் கைப்பற்றியதும், ஜான் காம்பெல் குளோவர் என்பவரை ராயக்கோட்டையின் தலைவராக நியமித்தது பிரிட்டிஷ் .
திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியின் படையில் இருந்த ஜமாலுதீன், குளோவரின் பிரிட்டிஷ் படையில் இணைக்கப்பட்டார். அப்போது ஜமாலுதீன் மகள் மெகருன்னிஸா மீது காதல் வயப்பட்டார் குளோவர்.
குளோவர் நாம் திருமணம் செய்து கொள்ளலாமா என்று மெகருன்னிஸாவிடம் கேட்டார். குளோவரின் வார்த்தைகள் தடைகளை கிழித்துக்கொண்டு காதலை வெளிப்பட செய்தன.
சரித்திரம் போற்றி பாராட்டுகிற எல்லா காதலர்களை போல் அன்பிலும், பண்பிலும் தனித்து நின்றார்கள் குளோவர்- மெகருன்னிஸா ஜோடி.
மெகருன்னிஸா ஒரு கிறிஸ்தவரை மணம் முடிப்பதை அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஏற்கவில்லை. ஆனால் மெகருன்னிஸா தன் காதலில் உறுதியாக இருந்தார்.
இரண்டாம் பர்மா போருக்கு தலைமையேற்று சென்ற குளோவர் பீரங்கி குண்டு தாக்கி ஒரு கையை இழந்து திரும்பினார். கணவரின் இந்த நிலை அவரை தீரா நோயில் தள்ளி மரணிக்க செய்தது .
மனைவியின் இழப்பை ஏற்க முடியாமல் தவித்த குளோவர், மனைவிக்கு நினைவுச் சின்னம் ஒன்றை எழுப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் வட இந்தியாவில் இருந்து சிற்பிகளை வரவழைத்து மண்டபம் ஒன்றை கட்டினார்.
தினந்தோறும் இந்த மண்டபத்திற்கு வந்து அமர்ந்திருப்பது குளோவரின் அலுவலாகி போனது. பின் '"ஜக்கேரி" என்னுமிடத்தில் ஆலமரத்துக்கு அருகில் சிறு குடிசை கட்டி குடியேறினார். 1876ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
ராயக்கோட்டை மலையில் குளோவர் கட்டிய மஹால் இப்போதும் இருக்கிறது. இந்த காதல் சின்னத்தை சம்பந்தப்பட்ட நிர்வாகம் புணரமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.