Tap to Read ➤

LIC vacancy 2023: ரூ 50,000 சம்பளத்தில் வேலை

LIC நிறுவனம் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் காலியாக உள்ள 9000 க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பத்தை வெளியிட்டு உள்ளது.
LIC இல் 9 ஆயிரத்து 394 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் அதற்கான விண்ணப்பத்தையும் LIC வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் Apprentice Development Officers (ADO) பதவிக்கு விண்ணப்பிக்கலாம்
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் licindia.in என்ற LIC யின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு சென்று ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்.

 தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ 51 ஆயிரத்து 500 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தின் ஆரம்ப தேதி - 21.01.2023

 விண்ணப்பிக்க கடைசி தேதி - 10.02.2023

 அழைப்புக் கடிதத்தைப் பதிவிறக்கம் செய்யும் தேதி - 04.03.2023

 முதல் நிலை தேர்வு நடைபெறும் தேதி - 12.03.2023

 முதன்மைத் தேர்வு தேதி - 08.04.2023
காலியிட விவரங்கள் :

 தெற்கு மண்டல அலுவலகம் - 1516 பணியிடங்கள்

தென் மத்திய மண்டல அலுவலகம் - 1408 பணியிடங்கள்

வடக்கு மண்டல அலுவலகம் - 1216 பணியிடங்கள்

வட மத்திய மண்டல அலுவலகம் - 1033 பணியிடங்கள்


 கிழக்கு மண்டல அலுவலகம் - 1049 பணியிடங்கள்

 கிழக்கு மத்திய மண்டல அலுவலகம் - 669 பணியிடங்கள்

 மத்திய மண்டல அலுவலகம் - 561 பணியிடங்கள்

 மேற்கு மண்டல அலுவலகம் - 1942 பதவிகள்
கல்வித் தகுதி மற்றும் வயது :

 விண்ணப்பதாரர்கள் தங்கள் கல்வித் தகுதிகளை https://licindia.in/Bottom-Links/Careers/Recruitment-of-Apprentice-Development-Officer-22-2 என்ற இணைய தளத்திற்கு சென்று சரி பார்க்கலாம்.

 விண்ணப்பதாரரின் வயது 21 வயது முதல் 30 வயது வரை இருக்க வேண்டும்.


தேர்வு செய்யும் முறை : 
 
ஆன்லைன் தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.

 ஆன்லைன் தேர்வில் தகுதிபெறும் விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடத்தப்படும்.

 ஆள் சேர்ப்புக்கு முந்தைய நாள் மருத்துவ தேர்வு மேற்கொள்ளப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் எல்ஐசியில் கோட்பாடு மற்றும் கள விற்பனை பயிற்சியை பெறுவார்கள்.

 பயிற்சியின் காலம், பயிற்சி தொடங்கிய நாளில் இருந்து தொடங்கும்.

 தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் 1 வருட தகுதி காண் காலத்தில் (Probation Period) இருப்பார்கள்.
விண்ணப்ப கட்டணம்:

 பட்டியலின விண்ணப்பத்தாரர்களை தவிர மற்றவர்களுக்கு - ரூபாய் 750
 
பட்டியலின விண்ணப்பதாரர்களுக்கு - ரூபாய் 100

 டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, UPI, இன்டர்நெட் பேங்கிங், IMPS, கேஷ் கார்டுகள் மற்றும் வாலட்களை பயன்படுத்தி பணம் செலுத்தலாம்.